8729 தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்-2.

சு.சுசீந்திரராஜா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, Peoples Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

xiv, 166 பக்கம், விலை: ரூபா 480., அளவு: 21.5X15 சமீ., ISBN: 978-955-1857-99-8.

தமிழியல் கட்டுரைகள் 50 இன் தொகுப்பாக முன்னைய தொகுதி 2009இல் வெளிவந்திருந்தது. (பார்க்க: நூல்தேட்டம் பதிவிலக்கம் 5766). இவ்விரண்டாவது தொகுதி மேலும் தமிழியல், மற்றும் மொழியியல் சார்ந்த 25 கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. தமிழ் இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் தெளிந்த ஆழமான மொழிசார் சிந்தனைகளை உருவாக்கி ஆய்வுநோக்கில் புரிந்துகொள்ள இக்கட்டுரைகள் உதவுகின்றன. சுவாமிநாதன் சுசீந்திரராஜா 1960இல் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனாரின் மாணவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றவர்.

ஏனைய பதிவுகள்