மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), சுந்தரம் சௌமியன் (தமிழாக்கம்). தெகிவளை: திஸர பிரசுராலயம், 129 துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 1992. (தெகிவளை: திஸர அச்சகம், 135 துட்டுகெமுனு வீதி).
(2), 234 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 21×14 சமீ.
புகழ்பெற்ற சிங்கள எழுத்தாளரும் நாவலாசிரியருமான மார்ட்டின் விக்கிரமசிங்கவின் விராகய என்ற சிங்கள நாவலின் தமிழாக்கம் இதுவாகும். இதே நாவலை Ashley Halpe என்ற பேராசிரியர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார். ஒரு மனிதனின் ஆன்மீக வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டும் உயர்ந்த உளவியல் நாவலாகும். தென்மாகாணத்தின் ஊர்மனையொன்றில் வாழும் பௌத்த மாணவன் ஒருவன் பௌத்த உணர்வு காரணமாக எவ்வாறு தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டான் என இக்கதை எடுத்துக் காட்டுகின்றது. திரைப்படமாக்கப்பெற்று ஜனாதிபதி விருதினையும் இக்கதை முன்னர் பெற்றிருந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 89360).