வேதநாயகம் தபேந்திரன். கொழும்பு 6: சரசு பதிப்பகம், 257/1 E, காலி வீதி, வெள்ளவத்தை, 4வது பதிப்பு, பெப்ரவரி 1999, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1996, 2வது பதிப்பு, ஏப்ரல் 1997, திருத்திய மூன்றாம் பதிப்பு, டிசம்பர் 1997.(அச்சக விபரம் தரப்படவில்லை).
160 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×14.5 சமீ.
இது போட்டிப் பரீட்சைகளுக்கான ஒரு வழிகாட்டி நூல். க.பொ.த.உயர்தர புதிய பாடத்திட்டத்திற்கும் ஏற்றது. அண்மைக்கால இலங்கை நடப்புக்கள், அண்மைக்கால உலக நடப்புக்கள், அண்மைக்கால உலக விடயங்களில் பிரபலமானோர், நாடுகள்-ஆட்சித் தலைவர்கள், இலங்கை, இலங்கையின் கல்வித்துறை, சர்வதேச நிறுவனங்கள், உலக விருதுகள், விண்வெளி அறிவியல், சர்வதேச நாள்கள், மருத்துவம், சினிமா, விஞ்ஞானம், கலை இலக்கியம், உலக விளையாட்டுக்கள், சுருக்கப் பெயர்கள்- நிறுவனங்கள், பல்துறைக் களஞ்சியம், மாதிரி வினாத்தாள்கள் 1-4 ஆகிய 18 தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. வணிகப் பட்டதாரியான நூலாசிரியர் திருக்கோணமலை மாவட்டத்தில் சமூக சேவைகள் உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 127884).