9109 சோதிட வினா-விடை.

சி.அகிலேஸ்வர சர்மா (மூலம்), இ.சி.வெங்கடேச ஐயர் (பதிப்பாசிரியர்), வெ.இரகுநாதையர் (துணைப் பதிப்பாசிரியர்). கொக்குவில்: சோதிட பரிபாலன மடம், 4வது பதிப்பு, ஆவணி 1997, 1வது பதிப்பு, வைகாசி 1933, 2வது பதிப்பு, ஆனி 1942, 3வது பதிப்பு, சித்திரை 1956. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).

xix, 335 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22.5×14 சமீ.

யாழ்ப்பாணம், மண்டைதீவு சி.அகிலேஸ்வர சர்மா அவர்கள்  வைகாசி 1933 இல் இயற்றிய சோதிட நூலின் மீள்பதிப்பு இதுவாகும். பதிப்புரையும் நூலாசிரியர் வரலாறு/முகவுரை என்பவற்றுடன் தொடங்கும் இந்நூல், கடவுள் வணக்கம், ஆரம்ப கணிதம், பன்னிரு பாவ பலன்கள், பொதுப்பலன், விஷய அட்டவணை ஆகிய பிரதான பகுதிகளை உள்ளடக்குகின்றது. அமரர் சி.அகிலேஸ்வர சர்மா (21.3.1893-26.2.1953), யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்மஸ்ரீ சிதம்பரநாதையரின் ஏக புத்திரர். கொழும்புத்துறை  பிரம்மஸ்ரீ  சுப்பிரமணிய ஐயரைத் தனது சமய குருவாக ஏற்றவர். இளம்பிராயத்திலேயே மண்டைதீவு சித்திவிநாயகர் கோவிலில் அருச்சகராகக் கடமையேற்றபின் அவ்வூரிலேயே வாழ்ந்து மறைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவியவர். பண்ணைத் தாம்போதியின் உருவாக்கத்திற்கு பல வழிகளிலும் உதவியவர். திருவெண்காட்டந்தாதி,  பண்ணைப் பாலக் கும்மி, மதுரை மீனாட்சி பேரின்பக் கீர்த்தனை, முருகன் கீர்த்தனைப் பதிகம், தற்கால நாகரீக வேடிக்கைப்பாக்கள், தெய்வாராதனை விளக்கம் ஆகிய நூல்களை இயற்றியவர். சோதிடத்தில் இவரது அதீத ஈடுபாட்டின் விளைவாக, இந்நூல் இவரால் உருவாக்கப்பட்டது. சோதிட சாஸ்திரத்தில் எழும் சந்தேகங்களுக்கு கேள்வி-பதில் வடிவில் இந்நூலில் விளக்கமளிக்கின்றார். சோதிட பரிபாலினி இதழில்  ஒன்றரை வருடங்களாக வெளிவந்த கேள்வி பதில் பகுதியின் நூல் வடிவம் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்

11768  எம்.ஜி.ஆர். கொலை வழக்கு: சிறுகதைகள்.

ஷோபாசக்தி. சென்னை 600 005: கருப்புப் பிரதிகள், பி.55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்சு சாலை, 4வது பதிப்பு, பெப்ரவரி 2016, 1வது பதிப்பு, மார்ச் 2009. (சென்னை600 005: ஜோதி என்டர்பிரைஸஸ்). 152

15908 பெருநினைவின் சிறு துளிகள்.

சிவா தியாகராஜா (மூலம்), சந்திரவதனா செல்வகுமாரன், சந்திரா ரவீந்திரன் (தொகுப்பாசிரியர்கள்). ஜேர்மனி: மனஓசை வெளியீடு, Manaosai Verlag, Schweickerweg  29, 74523  Schwabisch Hall, Deutschland, 1வது பதிப்பு, டிசம்பர் 2020. (ஜேர்மனி: Stuttgart).

Finest Casinos on the internet 2024

Articles Readily available Commission Methods for 5 Free No deposit Gambling establishment Uk Tournament Champ Opportunity: Burnley The new Favourites Paysafecard Casinos five-hundred Kr No-deposit