அர்ச. மத்தேயு. யாழ்ப்பாணம்: அர்ச்.சூசைமாமுனிவர் பதிப்பகம், 2வது பதிப்பு, 1965. 1வது பதிப்பு, செப்டெம்பர் 1959. (யாழ்ப்பாணம்;: அர்ச்.சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).
110 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
மத்தேயு என்பது கடவுளின் கொடை என்ற கருத்தையுடைய எபிரேய பெயராகும். இப்பெயர் மத்தேயு சுவிசேஷத்தின் 10ம் அதிகாரம் 9ம் வசனத்தில் முதலில் காணப்படுகின்றது. இவரே பின்னாளில், மாற்கு , லூக்காஸ் சுவிசேஷங்களில் லேவி என்று அழைக்கப்படுகின்றார். முதலாம் சுவிசேஷம், அர்ச் மத்தேயுவினால் எழுதப்பட்டதென்பதையும், சுவிசேஷகர் தம் நாட்டு மக்கள் யேசுநாதரின் தெய்வத் தன்மையை அறிந்து, அதன்பேரில் நம்பிக்கைகொள்ளச் செய்வதற்காகவே எழுதினார் என்பதையும் பரிசுத்த பாரம்பரியம் முதலாம் நூற்றாண்டு தொடக்கமே காப்பாற்றி வருகின்றது.