9115 இயேசுவே இறைவன்.

சிலோன் விஜயேந்திரன். சென்னை 5: சோனம் பதிப்பகம், 243 டி.எச்.ரோடு, ரத்னா கபே அருகில், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2003. (சென்னை 5: சோனம் பதிப்பகம்).

110 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 12×17.5 சமீ.

என் வாழ்வில்  இயேசு நிகழ்த்திய ஆறு அற்புதங்கள், இறைவனின் புகழ் மலர்கள், பிற்சேர்க்கை ஆகிய மூன்று பிரிவுகளை இந்நூல் கொண்டுள்ளது. முதலாவது பிரிவில் இருதய நோய்க் கொடுமையும் இறைவன் அளித்த விடுதலையும், கொடிய சர்க்கரை வியாதியிலிருந்து எனை மீட்ட இயேசு, புயல், மழையிலிருந்து எனைக் காத்த தேவன், பாம்பு கொத்தியதும் பரமன் காத்ததும், இருட்சிறையிலிருந்து மீட்ட மகிபன் இயேசு, அவளை எனக்களித்த அற்புத இயேசு ஆகிய தலைப்புகளில் இயேசு நிகழ்த்திய ஆறு அற்புதங்களை விபரிக்கிறார். இறைவனின் புகழ் மலர்கள் என்ற இரண்டாவது பிரிவில், இறைவனும் நானும், இறைவனைப் பாடுவேன், தேவ சுகம், இயேசுவை அறிவாயா?இறைவன், உயிரில் கலந்தார், நான், அழியாத ஆனந்தம், எனது ராகம் ஆகிய கிறிஸ்தவ பாடல்களைத் தருகின்றார். பின்னிணைப்பில் ஆண்டவர் இயேசுவும் மக்தலேனாவும் என்ற கட்டுரையும், சிலோன் விஜயேந்திரனின் நூற்பட்டியலும் இடம்பெறுகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 151718).

ஏனைய பதிவுகள்

Jocuri Egt Online

Content Joacă worldmatch sloturi – Dans De Sloturi Circus Octavian Gaming, Recensămân De Slotcatalog Ş Metode Ş Vărsare Acceptă Casinourile Online Germane? Sloturi Nextgen Gaming

Enjoy More 19,000 Online Casino games

Articles Zar Local casino Come across A gambling establishment Providing A no-deposit Incentive I’m Based in Restricted Region Should i Have fun with Vpn So

13256 யாழ்ப்பாணத்து நல்லைக் கந்தன் பாமாலை.

மு.க.சூரியன். கோப்பாய்: கவிஞர் மு.க.சூரியன், கோப்பாய் தெற்கு, 2வது பதிப்பு, ஆவணி 1970, 1வது பதிப்பு, ஆவணி 1968. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம்). 29 பக்கம், விலை: 50 சதம், அளவு: 21×13.5 சமீ.

8004 பொது அறிவு மஞ்சரி.

த.ந.பஞ்சாட்சரம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 6வது பதிப்பு, பெப்ரவரி 1992, 1வது பதிப்பு, 1963. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்). 92 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 20.5×14 சமீ. இலங்கை, உலகநாடுகளின் அண்மைக்கால