9117 இரட்சணிய வரலாறு: பரிசுத்த ஏடுகள் பாடநூல் க.பொ.த.(உ.த).

அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ. மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (மட்டக்களப்பு: சென். ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(5), 108 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ.

கல்விப் பொதுத் தராதர (உயர்தர) பரீட்சையில் கிறிஸ்தவ சமயத்தை ஒரு பாடமாகக்கொண்டு கற்கும் மாணவரின் தேவை கருதி இந்நூல் வெளிவருகின்றது. மாணவர்களின் ஆர்வத்தைத்தூண்டும் வகையில் விவிலியப் பகுதிகள் சிறு சிறு கதைகளாக விளக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியும் உப பிரிவுகளாக வகுக்கப்பட்டு தலைப்பிடப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளன. கடந்தகால பரீட்சை வினாக்களின் தொகுப்பும் இடம்பெற்றுள்ளது. விடயங்களைப் புரிந்துகொள்ள பூகோள அறிவும் முக்கியம் என்பதால் மறை பரவிய நாடுகளின் தேசப்படங்கள் விளக்கப்படங்களாகப் பின்னிணைப்பில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 132186).

ஏனைய பதிவுகள்

16667 சிறகு விரிக்காத பறவைகள்.

நாவற்குழி சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: இலங்கை தேசிய பார்வையற்றோர் சம்மளனம், வட மாகாணக் கிளை, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (யாழ்ப்பாணம்: தெல்லி அச்சகம், கொக்குவில்). x, 78 பக்கம், விலை: