9169 இந்து சமய பாடம்: பாடத்திட்டம் முற்றும் அடங்கிய முழுநூல்: க.பொ.த. 1971-1973 வகுப்புக்குரியது.

க.வேந்தனார், நா.கணபதிப்பிள்ளை (இணையாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 10வது பதிப்பு, 1971, 1வது பதிப்பு, 1959. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

(6), iv, 394 பக்கம், விலை: ரூபா 4.25, அளவு: 21×14 சமீ.

இலங்கை வித்தியாபகுதியாரின் ஜீ.சீ.ஈ.சாதாரண தரத்தின் 1969-1971 ஆம் ஆண்டுப் பாடத்திட்டத்திற்குரிய புதிய பகுதிகள் இப்பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. திருக்குறள், தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம், திருப்புகழ் ஆகிய புதிய பகுதிகள் 1969-1971 ஆம் ஆண்டுப்பாடத்திட்ட ஒழுங்கின்படி சேர்க்கப்பட்டுள்ளன. புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளுக்கு வித்துவான் சைவப்புலவர் நா.கணபதிப்பிள்ளை அவர்கள் விரிவுரை எழுதி வழங்கியுள்ளார். திருவருட்பயன் முதல் ஐந்து அதிகாரங்களுக்கும் சிறப்பான விளக்கவுரை தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 82261).

ஏனைய பதிவுகள்

Jumanji Tragamonedas

Content Sus Líneas | miss kitty casino Esparcimiento De Rebaja Casino Slotstars ¿para Qué Las Juegos Sobre Máquinas Tragamonedas Gratuito Españolas Son Tan Esgrimidas? Jugar

MCW Casino Bangladesh – Play On Any Device

Содержимое MCW Casino Bangladesh: Bonus Eligibility Requirements MCW Casino Bangladesh: App-Based Gaming Advantages MCW Casino Bangladesh: Mega Casino World Registration Bonuses MCW Casino Bangladesh: Seasonal

14542 மொழி வேலி கடந்து: நவீன சிங்கள இலக்கியங்கள் பற்றிய ஒரு பார்வை.

மேமன்கவி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). xxv, 26-135 பக்கம், விலை: ரூபா 350.,