ஏ.எஸ்.ஏ.தரங்கனி. மூளாய்: அருணா பப்ளிக்கேஷன்ஸ், ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: விக்ரம் பிரின்டர்ஸ், இல.19, Wolfendhal Lane).
122 பக்கம், விலை: ரூபா 145., அளவு: 22×14.5 சமீ.
இந்நூலின் முதல் ஆறு அத்தியாயங்களிலும் இந்து மதத்தின் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம், என்னும் ஆறு பிரிவுகள் பற்றிய அடிப்படை அறிவினை வழங்கும் வகையில் வினா-விடைகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஏழாவது அத்தியாயத்தில் இந்து மதம் சம்பந்தமான கலாச்சாரப் பண்புகள் பற்றிய தகவல்கள் வினா-விடைகளாகத் தரப்பட்டுள்ளன. க.பொ.த.சாதாரண, உயர்தர மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 136784).