9171 இந்து மதப் பொது அறிவு.

ஏ.எஸ்.ஏ.தரங்கனி. மூளாய்: அருணா பப்ளிக்கேஷன்ஸ், ஆஸ்பத்திரி வீதி, 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 13: விக்ரம் பிரின்டர்ஸ், இல.19, Wolfendhal Lane).

122 பக்கம், விலை: ரூபா 145., அளவு: 22×14.5 சமீ.

இந்நூலின் முதல் ஆறு அத்தியாயங்களிலும் இந்து மதத்தின் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம், என்னும் ஆறு பிரிவுகள் பற்றிய அடிப்படை அறிவினை வழங்கும் வகையில் வினா-விடைகளாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஏழாவது அத்தியாயத்தில் இந்து மதம் சம்பந்தமான கலாச்சாரப் பண்புகள் பற்றிய தகவல்கள் வினா-விடைகளாகத் தரப்பட்டுள்ளன. க.பொ.த.சாதாரண, உயர்தர மாணவர்களுக்கேற்ற வகையில் இந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 136784).

ஏனைய பதிவுகள்

14405 கொடகே சதர்த்தவாஹினீ வாணி கற்பகம் ஆங்கில-தமிழ் அகராதி.

வஜிர பிரபாத் விஜயசிங்க. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ். குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-1792 பக்கம்,