9205 கருடபுராணமென்று வழங்குகின்ற ஸ்ரீ கருடபுராண வசனம்.

துரைசாமி மூப்பனார். காரைநகர்: வியாவில் ஐயனார் தேவஸ்தானம், 1வது பதிப்பு, 2013. (யாழ்ப்பாணம்: தேவி அச்சகம், 140/1, மானிப்பாய் வீதி).

vi, 128 பக்கம், படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

காரைநகர், வியாவில் ஐயனார் தேவஸ்தானத்தின் இரண்டாவது வெளியீடாக இந்நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. முன்னர் பண்டிதர் க.வைத்தீசுவரக் குருக்களின் சைவக்களஞ்சியம் இவர்களது முதலாவது வெளியீடாக ஏப்ரல் 2013இல் வெளியிடப்பட்டிருந்தது. கவித்தலம் ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு அச்சியற்றப்பட்ட பிரதிக்கிணங்க கருடபுராண வசனமாகிய இந்நூல் இலங்கையில் அச்சிடப்பட்டுள்ளது.   (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234757).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்