9235 சாந்தி மார்க்கம்.

மௌலவி முஹம்மது பளீல். வெளியீட்டு விபரம் தரப்படவில்லை, 7வது பதிப்பு, 1966, 1வது பதிப்பு, 1957. (அச்சக விபரம் தரப்படவில்லை).

x, 413 பக்கம், விலை: ரூபா 6.25, அளவு: 21×14 சமீ.

க.பொ.த பரீட்சைக்குரிய புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக எழுதப்பட்டஇஸ்லாமிய பாட நூல் இது. ஈமான், இஸ்லாம், நபிகள் நாயகம், ஏனைய நபிமார்களிற் சிலர், நான்கு கலீபாக்கள், தோழர்கள் (ஸஹாபாக்கள்), இஸ்லாமிய மூலாதாரங்கள், பிக்ஹீம் சட்ட நிபுணர்களான நான்கு இமாம்களும் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இஸ்லாமிய அறிவியல் தகவல்கள் மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87297).

ஏனைய பதிவுகள்

15950 ஞானம்: எழுத்தாளர் கே.கணேஷ் சிறப்பு மலர்.

தி.ஞானசேகரம் (ஆசிரியர்), புலோலியூர் க.சதாசிவம், அந்தனி ஜீவா (துணை ஆசிரியர்கள்). கண்டி: ஞானம் பதிப்பகம், 19/7, பேராதனை வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2002. (கொழும்பு: விக்ரம் பிரின்டர்ஸ்). 68 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள்,