9238 தஃவாப் பணியில் பெண்கள்.

யூசுப் அல் கர்ழாவி பைஸல் மௌலவி-லெபனான் (மூலம்), எம்.ஏ.எம்.மன்சூர் (தொகுப்பாசிரியர்). மல்வானை: தாருல் அர்க்கம் பதிப்பகம், 26 சீ, ரக்ஸபான, 2வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1994.(தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல.1 B, P.T.De Silva Mawathe).

(6), 52 பக்கம், விலை: ரூபா 40., அளவு: 21×13.5 சமீ.

Women in Islamic Propaganda என்ற தலைப்பில் வெளியான நூலின் தமிழாக்கம். பெண் எதிர்காலப் பரம்பரையை உருவாக்கும் அதி உன்னத பொறுப்பு வாய்ந்தவள். அவளது உடல், உள, இயற்கை அமைப்புகள் அனைத்தும் இந்தப் பணிக்கு ஏற்பவே ஆக்கப்பட்டுள்ளன. இதன் பொருள் வீட்டில் அவள் அடைபட்டுக் கிடக்க வேண்டும் என்பதல்ல. அவள் வீட்டைவிட்டு போர்க்களம் வரை செல்லக்கூட அது அனுமதிக்கின்றது. ஆனால் வீட்டில் அவளது பணிக்கு அது பாதகம் விளைவித்து விடக்கூடாது என இஸ்லாம் வேண்டுகின்றது. சமூகக் களம் ஆணின் முதன்மையான பணி. வீடு, குடும்பம் இவை அவனது இரண்டாவது பகுதி. வீடும் குடும்பமும் பெண்ணின் முதன்மையான பணி. சமூகக் களம் அவளின் இரண்டாவது பகுதி. இவ்வாறு இஸ்லாம் ஆண்மீதும் பெண்மீதும் விதித்துள்ள கடமைகளையும் பொறுப்புக்களையும் இந்நூல் விரிவாக ஆராய்ந்து பொதுப்பணியில் இஸ்லாமியப் பெண்ணின் பாத்திரம் என்ன என்பதைக் கூறுகின்றது. கலாநிதி யூசுப் அல் கர்ழாவி இஸ்லாமிய உலகின் முக்கிய சட்ட வல்லுநர்களுள் ஒருவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23810).

ஏனைய பதிவுகள்

Gokkasten Spelen

Content Findes Der Casinoer, Såso Giver Free Spins Åt Spillemaskiner Online? Hurdan Markant Kostar Det Att Testa Slots Med Ledsen Gräns? Prøve Kostnadsfri Automater Hos