9255 இலங்கையின் சமூக பண்பாட்டு வரலாறு.

க.சண்முகலிங்கம்.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

viii, 111 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-435-5.

இலங்கையின் சமகால வரலாறு, இலங்கையின் சமூகவியல் என்ற இரு விடயங்கள் பற்றிய சிறப்புமிக்க ஆய்வுநூல்கள், ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றை விமர்சன நோக்கில் அறிமுகம் செய்யும் பத்து கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. சித்சிறி மலல்கொட, ஜொனதன் ஸ்பென்சர், பற்றிக் பீப்பிள்ஸ், ஜனிஸ் ஜிஜின்ஸ், குமாரி ஜயவர்த்தன, மைக்கல் றொபர்ட்ஸ், றொபர்ட் ஹோம்ஸ், சசங்க பெரேரா, அதுலசிறிகுமார சமரக்கோன் ஆகியோரின் நூல்களையும் ஆய்வுகளையும் இந்நூல் அறிமுகம் செய்கின்றது. மேற்குறித்த எழுத்தாளர்களின் ஆய்வுகள் வரலாற்று நோக்கிலும் சமூகவியல் நோக்கிலும் அமைந்தவை. இலங்கையில் பௌத்த சமய மறுமலர்ச்சியும் மாற்றமும்: 1750-1900, இலங்கையின் கிராமப்புறங்களில் அரசியலும் மாற்றமும் பற்றிய ஓர் ஆய்வு, இலங்கையின் மேற்கு மாகாணத்தின் முதலியார்கள், இலங்கையின் அரசியலில் சாதியும் குடும்பமும் 1947-1976, ஏ.பீ.டீ.சொய்சா: போர்க்குணமிக்க சோசலிஸ்ட் ஜனநாயகவாதியும் பௌத்த சீர்திருத்தவாதியும், சாதி முரண்பாடும் மேலோர் குழாம் உருவாக்கமும்: இலங்கையில் கராவ உயர் குழாத்தின் தோற்றம் 1500-1931, றொபர்ட் ஹோம்ஸ் பார்வையில் யாழ்ப்பாணத்தின் சாதி முறை, கிராமிய சமூகவியல்-முக்கிய எண்ணக்கருக்கள் சில, சசங்க பெரேராவின் எனது பார்வையில் உலகம், பத்தினித் தெய்வமும் சுனாமியும்: கிழக்கிலங்கையின் பாணமைக் கிராமம் பற்றிய ஓர் ஆய்வு ஆகிய பத்து தலைப்பகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. நூலாசிரியர் இலங்கை நிர்வாக சேவையில் 1971-2004 காலகட்டங்களில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்ற கணிப்புப் பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Kasyno Przez internet Zbyt Zł

Content Kasyno Przez internet Zbytnio Zł Graj Za Złotówki W Kasynach Sieciowy Bądź Gra Zbytnio Złotówki Po Kasynach Przez internet Wydaje się być Legalna? Kasyno

Windfall Brands

There are only three currencies available on your website, namely USD, Euro and GBP, and therefore when you are https://kiwislot.co.nz/60-free-spins/ playing out of a nation