9256 யாழ்ப்பாண வாழ்வியல்.

பரமு புஷ்பரட்ணம் (பதிப்பாசிரியர்). கொழும்பு 14: கலைக்கேசரி, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்;பர்ஸ் சிலோன் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி).

464 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-0811-02-1.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக, வரலாற்றுத்துறையினர், வீரகேசரி நிறுவனத்தின் கலைக்கேசரி வெளியீட்டாளர்களின் அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் 2011 செப்டெம்பர் 24-27ம் திகதிகளில் ஒரு கண்காட்சியையும் கருத்தரங்கையும் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மரபுரிமைகளை அடையாளப்படுத்த பலதரப்பட்ட தொல்லியற் சின்னங்களைத் தேடிக் கண்டுபிடித்தும், பொது மக்களிடம் இருந்து சேகரித்தும் அவற்றைப் பொருட்காட்சியூடாக மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிய வரலாற்றுத்துறையினர், கலைக்கேசரியுடன் இணைந்து பொருட்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பல மரபுரிமைச் சின்னங்களின் புகைப்படங்களையும், யாழ்ப்பாணப் பண்பாட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட பல ஆய்வுக் கட்டுரைகளையும் ஆவணப்படுத்தி அவற்றை இந்நூலாக வழங்கியிருக்கிறார்கள். தமிழ்மொழியின் தொன்மை, மொழிக்கூறுகள் புலப்படுத்தும் யாழ்ப்பாணப் பண்பாடு, யாழ்ப்பாணத்தவரிடையே உறவுப்பெயர்களின் முதன்மைப் பயன்பாடு, மரபுரிமைச் சின்னங்களைப் பேணல், ஆவுரஞ்சிக் கற்களும் சுமைதாங்கிக் கற்களும், சின்னமேளம், பாவலர் தெ.அ.துரையப்பாபிள்ளை, கலிங்க மாகோன், ஈழகேசரி, ஈழத்தமிழரின் அரசியல் கலாச்சாரம், மரபுசார் சட்டங்கள், செங்குந்தர் மரபு, பெண்கல்வியும் பயன்பாடும், பிரித்தானியர் காலத்தில் கல்வி, இந்து சமயக் கல்வி, குடும்ப பொருளாதார சூழலும் மாணவர் கல்வியும், பண்டிதர் சச்சிதானந்தனின் யாழ்ப்பாணக் காவியம், சிறுகதைப் பெண்படைப்பாளிகள், தீண்டாதான் ஆங்கில நாவல், அமெரிக்க மிஷனரியின் வகிபாகம், மூலிகைகளின் பாவனையும் பயன்பாடும், இனத்துவ இசை வரலாறு, பனையின் சிறப்பு என இன்னோரன்ன விடயப்பரப்புகளில் யாழ்ப்பாணத்தைப் பின்னணியாகக் கொண்டு சமர்ப்பிக்கப்பட்ட 44 ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 8 ஆங்கிலக் கட்டுரைகளாகும்.

ஏனைய பதிவுகள்

Lord Of The Ocean Gratis Vortragen

Content Schlussbetrachtung Nach Book Of Ra Magic Spielautomat Buch Ihr Ra Via Spielgeld Duplizieren Eltern Eigenen Kode Ferner Akzeptieren Sie Ihn Auf Ihrer Inter seite

Omkring Spilnu Dk

Content App #5: Bank Caller Vores Opsummerin Foran Spilnu Spilleban Nye Spil Hos Danske Kongeli Kasino Reklamerne kommer i hvert fald aldrig i livet indtil