9258 யாழ்ப்பாணப் பண்பாடு: மறந்தவையும் மறைந்தவையும்.

எஸ்.சிவலிங்கராஜா.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 201 பக்கம், விலை: ரூபா 550., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-421-8.

பேராசிரியர் சு.வித்தியானந்தன் நினைவுப் பேருரையாக வாசிக்கப்பட்டு யாழ்ப்பாணத் தினசரிப் பத்திரிகையில் தொடராக வெளிவந்த ஆய்வுக்கட்டுரையின் விரிவான வடிவம் பின்னர் வீரகேசரி பத்திரிகையின் மாத வெளியீடான கலைக்கேசரியில் தொடராக வெளியிடப்பட்டது. அத்தொடரின் நூல்வடிவமே இதுவாகும். அறிமுகம், உணவு, உறையுள், ஆடை அணிகலன், புழங்கு பொருட்கள், போக்குவரத்து, மொழிசார் பண்பாட்டுக் கூறுகள், ஆட்பெயர் வழக்காறுகள், உறவுமுறைச் சொற்கள், மரபுவழிச் சீர்மியம், பாரம்பரிய விளையாட்டுக்கள், பாரம்பரியத் தொழில்கள், திட்டுக்கள், யாழ்ப்பாணத்தில் அரைவாய் மொழிப்பாடல்கள், யாழ்ப்பாணத்து வாய்மொழி இலக்கியம், யாழ்ப்பாணத்துக் கோயிற் திருவிழாக்கள், பிறப்பு முதல் ஏடு தொடக்குதல் வரையான சடங்குகள், பூப்பு நீராட்டற் சடங்கு, திருமணச் சடங்கு, மரணச் சடங்கு முறைமைகள், ஒப்பாரிப் பாடல்கள், யாழ்ப்பாணத்து வாழ்வியலிற் பஞ்சாங்கம் ஆகிய 22 தலைப்புகளில் இக்கட்டுரை விரிகின்றது. சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா தனது இளமாணி, முதுமாணிப் பட்டங்களையும் கலாநிதிப்  பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். அதே பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைப் பேராசிரியராக, துறைத்தலைவராகப் பணியாற்றுகின்றார். வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சு 24.10.2015இல் கிளிநொச்சியில் நடாத்திய வடக்கு மாகாண இலக்கியப் பெருவிழாவில்  2014இல் வடக்கு மாகாணத்தில் வெளிவந்த சிறந்த ஆய்வு நூலுக்கான பரிசை வென்ற நூல்.

ஏனைய பதிவுகள்

Jackpot 6000 Free Spins 2024

Content Free Spins And Akkvisisjon Abuse | 50 gratis spinn på mighty sphinx Ingen innskudd Jackpot 6000 Online Slot ‎machine Mest Populaere Spilleautomater How We