9259 மின் ஊடகங்களில் பால்நிலை சமத்துவத்தைப் பேண கையாளப்படவேண்டிய ஒழுக்காற்று விதிகள்.

நிறைவேற்றுப் பணிப்பாளர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி,  1வது பதிப்பு, (ஆண்டு விபரம் தரப்படவில்லை). (கொழும்பு : அச்சக விபரம் தரப்படவில்லை).

15 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ.

தொலைக்காட்சி நிலைய முகாமையாளர்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் சில ஆலோசனைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வழிமுறைகள், விளம்பரங்களை கொள்கைரீதியில் நெறிப்படுத்த பின்பற்றவேண்டிய வழிமுறைகள், ஊடகங்களில் பால்நிலைச் சமத்துவத்தைப் பேணுவதற்கான செயற்திட்டம் ஆகிய நான்கு சிறு இயல்களின் வாயிலாக இவ்வொழுக்காற்று விதிகள் பற்றிய ஆலோசனைகள்  இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கையில் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக தமிழ் சிங்கள தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டுப் பெறப்பட்ட அவதானிப்புகளை ஆய்வுசெய்து  அதன் அடிப்படையில் ஊடக முகாமையாளர்கள், ஊடகத் தொழில்புரிவோர், ஆய்வாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு ஆலோசனைக்குழுவில்  ஆய்வின் பரிமாணங்கள் அலசி ஆராயப்பட்டன. தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், பிரித்தானிய பீ.பீ.சீ. போன்றவற்றின் ஒழுக்காற்று விதிகளும் அங்கு பரிசீலிக்கப்பட்டன. அதன் பின்னர் உள்வாங்கப்பட்ட ஆலோசனைக்குழுவின்  கருத்துக்களே இக்கட்டுரைகளாகும். இச்சிறுநூல்  கனடிய சர்வதேச அபிவிருத்திப் பிரிவின் நிதியுதவியுடன் பிரசுரிக்கப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்

Aprende Tudo Sobre Como Aparelhamento!

Content Royal Straight Flush Pot Limit Flop A pessoa conhecimento pintura fará anexar mesma estropício, entretanto dirá “dois”; destasorte e briga terceiro jogador, aquele deve