9260 ஆண் தலைமை ஆட்சி என்றால் என்ன?

கம்லா பஷின் (ஆங்கில மூலம்), புஷ்பா சிவகுமாரன் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 425/15, திம்பிரிகஸ்யாய வீதி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 10: கருணாரத்ன அன் சன்ஸ்).

(2), 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

What is Patriarchy?  என்ற தலைப்பில்  Kamla Bashin அவர்களால் எழுதப்பெற்று 1994இல்  டெல்லியிலிருந்து  Kali for Woman என்ற அமைப்பினால் வெளியிடப்பெற்ற நூலின் தமிழாக்கம் இதுவாகும். பெண்ணிலைவாதம் தொடர்பான சில பிரச்சினைகளும் தென் ஆசியாவில் அதன் பொருத்தமுடைமையும் என்ற மிகப் பிரபல்யமான நூலின் ஆசிரியர் எழுதிய இச்சிறுநூலில், துல்லியமான, எளிதில் கிரகித்துக்கொள்ளக்கூடிய நடையில் ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையின் பல்வேறு இழைகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. கேள்வி-பதில் வடிவில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. பெண்கள் கீழ்ப்படிவானவர்களாக இருக்கின்றார்கள் என்ற பெண்ணிலைவாதிகளின் சிந்தனைப் பகுப்பாய்வைக் கொண்டு ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையை இச்சிறு நூல் அறிமுகம் செய்கின்றது.  பெண் அடிமைத்தனம் எவ்வாறு அமைகின்றது? எவ்வாறு தோன்றியது? எவ்வாறு வரலாற்றுரீதியாக உலகின் பல பாகங்களிலும்  அது உருவாகியதென்பதையும் இந்நூல் விளக்குகின்றது. ஆண் தலைமை ஆட்சிச் சமுதாய முறைமையானது,  முக்கியமான சமூக நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்களையும் கட்டுப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கெதிராகப் பாரபட்சம் காட்டும் விஷேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இவற்றுக்கெதிராக, சமூக மாற்றங்கள் கோரிப் பெண்கள் மேற்கொண்ட போராட்டங்களை இனங்காண்பதற்கும் இந்நூல் முயல்கின்றது. நூலாசிரியர் புதுதில்லியிலுள்ள உணவு விவசாய அமையத்தின் (FAO) வறுமை ஒழிப்பு இயக்கம்ஃஅபிவிருத்திக்கான செயற்பாடு என்ற பிரிவில் கம்லா பாஷின் பணிபுரிகிறார். பெண்கள் இயக்கங்களில் தீவிர ஈடுபாடுடைய இவர், மகளிரும் அபிவிருத்தியும், மகளிரும் ஊடகங்களும், மகளிரும் கல்வியும் பற்றி விரிவான முறையில் எழுதியிருப்பதுடன் சிறுவர்களுக்கான பாடல்களையும் நூல்களையும் எழுதியிருக்கிறார்.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17905).

ஏனைய பதிவுகள்

Cfd Change

Blogs Purchase the Earth’s No, step one Cfd Vendor What are the Greatest Give Gambling Brokers? **additional Give For us Share Bequeath Wagers Similarities Ranging