9261 ஆண் நிலை இயல்பு பற்றிய ஆழமான தேடல்.

கம்லா பஹாசின் (மூலம்) மு.பொன்னம்பலம் (தமிழாக்கம்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் றெரஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2005. (கொழும்பு 6: டெக்னோபிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ.கூரே மாவத்தை).

(4), 90 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ., ISBN: 955-9102-81-8.

கம்லா பஹாசின்  2004இல் எழுதிய  Exploring Masculinity என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவாகும். இந்நாட்களில் எல்லோரும் ஆண்நிலை இயல்புபற்றி ஏன் கதைக்கிறார்கள்? அதன் மூலம் நாம் எதைக் கருதுகின்றோம்? ஒரே வகையான ஆண்நிலை இயல்புதான் இருக்கிறதா அல்லது அனேக ஆண்நிலை இயல்புகளுக்கு நாங்கள் முகம்கொடுக்கவேண்டுமா? மிகத் துலக்கமுடன் எழுதப்பட்டுள்ள இப்பிரசுரம் ஆண் நிலை இயல்பின் கருத்து பால்நிலைத் தொடர்புகள், சமூக ஒழுங்குகள், அரசியல் பொருளாதார முறைமைகள், சமய குடும்பக் கோட்பாடுகள் ஆகியவை தொடர்பான அதன் முக்கியத்துவம் பற்றி ஆழமான தேடுதலை மேற்கொள்கின்றது. அது மேலோங்கிய ஆண்நிலை இயல்பு, பேராண்மை ஆண்நிலை இயல்பு,  தொழிலாளர் முதலாளித்துவ ஆண்நிலை இயல்பு ஆகியவற்றில் தன் பார்வையைச் செலுத்துகின்றது. நூலாசிரியர் இருபது வருடங்களுக்கும் மேலாக குயுழுவின் பசியிலிருந்து விடுதலை என்ற பிரச்சார அமைப்போடு வேலை செய்தவர். அத்தோடு நன்கு அறியப்பட்ட பால்நிலைத்துறை பயிற்றுநருமாவார்

ஏனைய பதிவுகள்

Keno Rejsefører 2024

Content Rejsefører Oven i købet Den Klik Her Bedste Keno Strategi Spillepladen Hvorlede Mye Kan Du Vinne Inden for Keno? Spil Riches Of Robin Spilleautoma

Tragamonedas En internet 2024

Content Revisión de tragamonedas en línea Roman Chariots – Cotas Sobre Tragamonedas Sobre Casino Que Debes Conocer Tratar A los Tragamonedas En internet Gratuito Hace