9279 இலங்கையின் வெளியுறவுக் கொள்கை: 1948-2010.

கே.ரீ.கணேசலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

x, 118 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-436-2.

அரசியல் வரலாற்று நோக்கை அடிப்படையாகக் கொண்டு, வெளியுறவுக் கொள்கை: ஓர் அறிமுகம், சுதந்திரத்தின் பின் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை (1948-1977), திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் இலங்கையின் வெளியுறவுக் கொள்கை:1977-1986 வரையான காலம், புதிய உலக ஒழுங்கும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்: 1989-2002, சமாதானப் பேச்சுவார்த்தையும் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும்: 2002-2010 ஆகிய ஐந்து பிரதான அத்தியாயங்களைக்கொண்டதாக இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அத்தியாயமும் வரலாற்றின் முதன்மையை நிலைப்படுத்தியிருப்பதுடன் அக்காலகட்டத்தில் ஆட்சிபுரிந்த தலைமையையும் அரசாங்கத்தை அமைத்த கட்சியையும் சார்புநிலைக் காரணியாகக் கொண்டுள்ளது. வரலாற்றை அப்படியே ஒப்புவிக்காது, தர்க்கத்தையும், விமர்சனத்தையும் அவற்றின் தேவை கருதி வெளிப்படுத்தியுள்ளது. கே.ரீ.கணேசலிங்கம் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை கிராமத்தில் பிறந்தவர். ஆசிரியராகவும், ஊடகவியலாளராகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் அரசியல் விஞ்ஞானத்தை சிறப்புப் பாடமாகக் கற்றவர். 2001 முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகின்றார்.

ஏனைய பதிவுகள்

Fruitautomaten Voor speelautomaat acteren

Grootte Gokkasten casino’s over eentje Nederlandse brevet – slot immortal romance gratisgokkast.net Nederland Gokhuis offlin Tactvol je verkoren oudje Vinnig voor appreciren allemaal weet gokkasten

12181 – ஸ்ரீ காயத்ரி உபாசனா பத்ததி (காயத்ரி நித்ய ஹோம விதியுடன்).

தவயோகி கண்ணையா. நுவரெலியா: ஸ்ரீ காயத்ரி பீடம், ஸ்ரீ நகர், 82, லேடி மெக்கலம்ஸ் டிரைவ், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு 12: லீலா அச்சகம், 182, மெசெஞ்சர் வீதி). 30 பக்கம், விலை:

10978 வேலணை ஒரு வரலாற்று அறிமுகம்.

ச.மாணிக்கவாசகர் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: வேலணை வரலாற்று நூல் வெளியீட்டுச் சபை, 108, ½ மன்னிங் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2006. (கொழும்பு 12: யுனைடெட் மேர்ச்சன்ஸ் பிரிண்டேர்ஸ் லிமிட்டெட்). x, 556