9289 இலங்கையில் சம்பளமும் தொழில் நியதி நிபந்தனைகளும்.

பீ.நவரத்ன (சிங்கள மூலம்), பீலிக்ஸ் டீ.பிலிப் (தமிழாக்கம்).  கொழும்பு 3: பிட்ரிஹ்-எபர்ட்-ஸ்டிவ்டுங், 14, ரொட்டுண்டா கார்டின்ஸ், 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1987. (அச்சக விபரம் தரப்படவில்லை).

172 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

இது சிங்கள மொழிநூலின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பாகும்.  இந்நூலாசிரியர் சம்பளச் சபை, வேதனாதிகள் நியாய சபைகளின் செயலாளராகப் பணியாற்றியவர். மொழிபெயர்ப்பாளரான  பீலிக்ஸ் டீ.பிலிப்  சட்ட வரைஞர் திணைக்களத்தைச் சேர்ந்தவர். சட்டவாக்கங்களைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் கைதேர்ந்த அனுபவமும் ஆற்றலும் விவேகமும் கொண்டவர். இந்நூல் வெளியிடப்படுவதன் பிரதான நோக்கமாக அமைவது, இலங்கையின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் அலுவலர்களுக்கு ஒரு கைநூலாகப் பயன்படுத்துவதேயாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48599).

ஏனைய பதிவுகள்

9534 பாப்பாவுக்குப் பத்துப் பாடல்கள்.

த.துரைசிங்கம். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 BA தம்பி வீதி). 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 5.,

9008 பொது அறிவு.

காஞ்சனா இரத்தினம். வவுனியா: காஞ்சனா இரத்தினம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2005. (வவுனியா: ஜெய்னிக்கா பிரின்டர்ஸ்). v, 258 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 25×18 சமீ. அனைத்துத் துறைசார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய