9288 பிரதேச அபிவிருத்தி: கோட்பாடுகளும் உபாயங்களும்.

மா.செ.மூக்கையா. கண்டி: சமூக அபிவிருத்தி நிறுவனம், 1வது பதிப்பு, அக்டோபர் 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

ix, 61 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.

பிரதேச அபிவிருத்தியும் திட்டமிடலும், பிரதேசம், பிரதேச அபிவிருத்தி பற்றிய தத்துவங்கள், பிரதேச அபிவிருத்திக்கு செயற்பாட்டுரீதியிலான விளக்கங்கள், பிரதேச வருமான சமன்பாடின்மை பற்றிய கோட்பாடுகள், பிரதேச அபிவிருத்தி பற்றிய மறுபரிசீலனை, பிரதேச அபிவிருத்தி உபாயங்கள், ஆற்று வடிநில அபிவிருத்தி நிகழ்ச்சிகள், வளர்ச்சிமுனை உபாயம், பின்தங்கிய பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியினைத் தூண்டுவித்தல், நெருக்கடிப் பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பெருநகரப் பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குதல், நகர படிமுறை ஒழுங்கினை அபிவிருத்தி செய்தல், பிரதேச திட்டமிடலுக்கான மாற்று அணுகுமுறைகள், விவசாயம்சார் கிராமிய பொருளாதாரம் ஆகிய 14 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் மா.செ.மூக்கையா அவர்களின் இந்நூல் புவியியல் மாணவர்களின் அவதானத்தைப் பெரிதும்; ஈர்க்கவல்லது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236856).

ஏனைய பதிவுகள்

14226 பிரம்மமாய் நின்ற சோதி.

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1.14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 86