9314 ஆரம்பக் கல்வி.

ச.நா.தணிகாசலம்பிள்ளை. யாழ்ப்பாணம்: கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை, சுபஸ்தான், 672, காங்கேசன்துறை வீதி, 2வது பதிப்பு, ஒக்டோபர் 2008, 1வது பதிப்பு, ஏப்ரல் 1999. (கொழும்பு 6: கே.வி.எல். பிரிண்டர்ஸ், 146-2/1, காலி வீதி).

xvi,104 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-50250-2-7.

ஆரம்பக்கல்வியெனும் அத்திவாரம், ஆரம்பக் கல்விக் குறிக்கோள்களும் தேர்ச்சிகளும், ஆரம்பக்கல்வி சார்ந்த தேர்ச்சிகள், ஆரம்பக்கல்விக் கலைத்திட்டம், தேசியக் குறிக்கோள்கள், அடிப்படைத் தேர்ச்சிகள், ஆரம்பக்கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தேர்வும் பயிற்சியும், ஆரம்பக்கல்விப் பாடசாலைகள், ஆரம்பக் கல்வி கற்றல் கற்பித்தல் செயற்பாடகள். புதிய கல்விச் சீர்திருத்தங்கள், அதிபர் முகாமைத்துவம், ஆரம்பக்கல்வி பாடசாலை நிர்வாகக் கட்டமைப்பு, ஆரம்பக் கல்விப் பாடசாலை வகுப்பறை ஒழுங்குகள், ஆரம்ப வகுப்பறையும் வளப்பிரயோகமும், பின்னடைவும் மெல்லக்கற்போரும், குறைபாடுகளை இனங்காணாமை, போக்குவரத்துக் கஷ்டம், ஆரம்பக் கல்விப் பாடத்திட்ட நடைமுறைகள், ஆரம்பக் கல்வியும் மாணவர் சமூகமளிக்காமையும், குழுக்கற்கை, கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் சமூகத்தை ஈடுபடுத்தல், சமூகத்தவர்களது உதவி, ஆரம்பக்கல்வி கற்பிக்கப்படும் பாடசாலைகளில் மேலெழும் பிரச்சினைகள், ஆசிரியருக்கு கல்வி உளவியல் எவ்வகையில் உதவுகின்றது, ஆரம்பப் பிரிவினர்க்குப் பொருத்தமான கற்பித்தல் முறைகள், கல்விச் சிந்தனையாளர்கள் சிலரின் ஆரம்பக்கல்வி பற்றிய கருத்து, வீட்டை அடிப்படையாகக் கொண்ட முன்பிள்ளைப் பருவ விருத்தி, ஆரம்பக்கல்வியும் தர உறுதிப்பாடும், அபிவிருத்தி என்றால் என்ன? புதிய கல்வி மறுசீரமைப்பின் அடிப்படையில் நவீன கற்றல் கற்பித்தல் முறைமைகள், ஆரம்பக் கல்வியின் தரத்தை உயர்த்துதல் ஆகிய அத்தியாயத் தலைப்புகளில் உள்ளடக்கப்பட்ட  விடயங்களை இந்நூல் விரிவாகக் கூறுகின்றது. இந்நூலாசிரியர், ச.நாகமுத்து தணிகாசலம்பிள்ளை, 1996இல்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலாநிதிப் பட்டம் பெற்றவர்.  வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் ஆரம்பக் கல்விக்குப் பொறுப்பான கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். அவரது அனுபவ வெளிப்பாடு இந்நூலில் துலக்கமாகத் தெரிகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  206729). 

ஏனைய பதிவுகள்

Parlay Gaming Guide

Posts Betting Conditions Tips Wager on Pony Racing Faq’s Do Betting Tips Assist Bettors Victory Currency? Experts’ Picks, Better Wagers: Just how can Derrick Lewis

2024 Playojo Local casino Review

Posts My Sense Examining Twist Local casino Hellspin Com Recommendations Player’s Membership Ended Because of So-called Bonus Punishment Should i Obtain Software To experience? All of

Yatırımsız Bonus Veren Sitelerin Avantajları

Bahis sitelerinde cazip bonuslar ve promosyonlar, oyuncuları siteye çekmek ve onların oyun deneyimlerini geliştirmek için kullanılır. Deneme bonusları, oyuncuların siteyi ve oyun seçeneklerini risk almadan