9317 கல்விச் சமூகம்.

ஏ.எல்.நௌபீர். இறக்காமம்: Centre for Education Revival Irakkamam (CERI), 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).

xvi, 160 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0952-02-1.

கல்விச் சமூகம் பற்றிய ஏ.எல்.நௌபீர் அவர்களின் கட்டுரைகளைக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவுச் சமூகத்தின் தேவை, நமது பாடசாலைகள்: ஒரே புள்ளியை நோக்கி நகரும் முரண்பட்ட மூன்று தரப்பினர், நமது பாடசாலைகள்: பெற்றோர், அதிபர் இணைவுகளும் விடுபடல்களும், மாணவர்களின் வீட்டு வேலை: பெற்றோர், ஆசிரியர் கவனக் குவிப்பு அவசியம், இன்றைய கல்வி பற்றிய செல்நெறிகளும் எமக்கான கல்வியும், ஒழுக்கக் கல்வியும் பின்னடைவிலிருந்து மீள்தலும், 21ஆம் நூற்றாண்டுக் கல்வி இலக்கு: எமது பின்புலமும் இருப்பும், எமது பாடசாலைகளில் கழிவுகளை முகாமை செய்தல், முஸ்லீம் சமூகம்: கல்வி, புலமைப் பரிசில்கள் மரபும் மாற்றமும் போன்ற இன்னோரன்ன தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. முஸ்லீம் சமூகத்தின் கல்வியறிவு வளர்ச்சியில் ஆசிரியரின் அக்கறை கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றது.  கல்வி மேம்பாட்டின் பங்காளர்களது வகிபாகங்கள் குறித்து கவனயீர்ப்புச் செய்யும் இந் நூல் இப்பங்காளர்களின் இன்றைய நிலைமைகளை விமர்சனரீதியில் பகுப்பாய்வு செய்கின்றது. ஆதம் லெப்பை நௌபீர் 1973இல் இறக்காமத்தில் பிறந்தவர். சமுர்த்தி முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். 1999இல் பேராதனைப்பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236915).

ஏனைய பதிவுகள்

14234 முருகன்கீர்த்தனைகள்: ஆறுமுக வேலவன் துதி. பாமதி மயூரநாதன்.

யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). vii, 24 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு:

Angling Frenzy Casino slot games

Articles Sort of Modern Jackpots As to the reasons Enjoy Bookofslots Com? Bettor Selling England Euros Parlay You to Will pay 987,168 Queen Kong Cash