9318 கல்விச் சீர்மியம்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: பேராசிரியர் சபா.ஜெயராசா, கல்வியியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன் பிறின்டேர்ஸ், நல்லூர்).

(3), 104 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ.

கல்விச் சீர்மியம் (Educational Counselling) தொடர்பான அனைத்துக் கூறுகளையும் ஒன்றிணைத்துத் தமிழில் வெளிவரும் ஒரு முன்னோடி நூலாக இது அமைந்துள்ளது. தனியாள் செயற்பாடுகள், சீர்மியம் என்ற எண்ணக்கரு விளக்கம், கல்விசார் ஆற்றுப்படுத்தல், கல்வியில் தரக்காப்பீடும் இடர்சிக்கிய மாணவர்களும், கல்வியில் உளநலன், தொடர்தொழில் ஆற்றுப்படுத்தல், இலங்கையும் தொடர்தொழில் ஆற்றுப்படுத்தலும், தீர்வுகளை நோக்கிய உளச்சிகிச்சை முறைகள், பிரச்சினை விடுவிக்கும் சீர்மிய நடவடிக்கை, சீர்மியச் செயல்முறை, சீர்மியச் செயல்முறையின் படிநிலைகள், சீர்மியச் செயல்முறையின்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளும் மீள்வதற்கான நுட்பங்களும், செவிமடுத்தல் நுட்பங்கள், உளக் குலைவு மேலைத்தேச உளவியல் அணுகுமுறைகளின் அபத்தங்கள், ஆளுமை நடையியலும் சீராக்கலும் ஆகிய 15 தலைப்புகளில் கல்விச் சீர்மியம் பற்றிய ஆழமான கருத்துக்கள் இந்நூலில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 131661).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

16265 ஹாட்லியின் சுவடுகள் : 175ஆவது ஆண்டு நிறைவு மலர் 1838-2013.

கே.அருளானந்தம், எஸ்.சிற்பரன் (மலர் ஆசிரியர்கள்). பருத்தித்துறை: ஹாட்லிக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜ{லை 2013. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி). lxiv, 105 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

12393 – சிந்தனை: தொகுதி I இதழ் 1 (ஜனவரி 1976).

அ.சண்முகதாஸ் (இதழாசிரியர்), ஆ.சிவநேசச்செல்வன் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மனிதப் பண்பியற் பீடம், இலங்கைப் பல்கலைக்கழக யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, தை 1976. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம், பிரதான வீதி). (7), 68