9340 அல்லிராணிக் கோட்டை: நாட்டுக்கூத்து.

கபிரியல் ஞானப்பிரகாசம் தேவதாசன் (புனைபெயர்: பாஷையூர் தேவதாசன்). மன்னார்: முசலிப் பிரதேச சபை, முத்தரிப்பு, சிலாவத்துறை, 1வது பதிப்பு, டிசம்பர் 2001. (மன்னார்: வாழ்வுதயம், பிரதான வீதி).

xxiii, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 29.5×21 சமீ.

மன்னார் மாவட்டத்தில் முசலி முத்தரிப்பு என்னுமிடத்தில் அழிபாடுகளின் மத்தியில் காணப்படும் அல்லிராணிக் கோட்டையையும், கிளிநொச்சி மாவட்டத்தில் மண்டைக் கல்லாறு பாலத்திற்கும் பூநகரிக்கும் இடையில் அமைந்திருக்கும் அரசபுர அல்லிராணி தடாகத்தையும் கருப்பொருளாகக் கொண்டு எழுந்த நாட்டார் கதையொன்றை ஈழத்தின் பாரம்பரிய கலையான நாட்டுக்கூத்து வடிவில் இந்நூல் வழங்குகின்றது. அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள ஆங்கில மொழிபெயர்ப்பாளரான நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியவர். இலங்கை கலாசார அமைச்சினால் கலாபூசணம் விருது வழங்கப்பெற்றவர்.

ஏனைய பதிவுகள்

Totally free and online

Blogs Video game Features Solitaire Bucks Discount coupons (Involved in Arcade Video game You can lawfully take part in a real income tournaments throughout Us states