9355 ஈழத்துத் தமிழியல்சார் தமிழ் ஆய்விதழ்கள்: ஒரு கண்ணோட்டம்.

செ.யோகராசா. கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், 7, 57வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஐப்பசி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×15 சமீ., ISBN: 955-8564-13-3.

இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க தமிழியல் ஆய்விதழான ‘தமிழ் உலகு’ வெளியீட்டு விழாவின்போது 11.10.2003 அன்று நிகழ்த்தப்பட்ட உரையின் விரிவான வடிவம். கலாநிதி செ.யோகராசா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறைத் தலைவராவார். 37வது தமிழ்ச்சங்க வெளியீடாக இது வெளிவருகின்றது. ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின் மனோநிலை தமிழ் ஆய்விதழ்களின் வருகைக்கு சாதகமற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதாகக் குறிப்பிடும் ஆசிரியர், ஈழத்துத் தமிழ்ச் சமூகத்தின்- ஆங்கிலேயரது ஆட்சியின் பெறுபேற்றினால் உருவான-உயர் வருமானம் தரும் உத்தியோக மோகத்திலிருந்து விடுபடமுடியா நிலையும் அதிலிருந்து உருவான எமது சமூகத்தின் பெரும்பான்மையினரது இயல்பும் தமிழ்சார் கற்கைநெறி தொடக்கம் தமிழ்சார் ஆய்வு, ஆய்விதழ் வளர்ச்சி என்பன வரைக்கும் பெருந்தடையாக இருந்து வந்துள்ளன என்கிறார்.

ஏனைய பதிவுகள்

15218 இலங்கையின் பொருளாதார மற்றும் சமூகப் புள்ளிவிபரங்கள் 2020.

இலங்கை மத்திய வங்கி. கொழும்பு 1: புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை மத்திய வங்கி, 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2020. (கொழும்பு: அரசாங்க அச்சகம்). viii, 188 பக்கம், அட்டவணைகள், விலை:

10517 ஒரு துளி வாழ்வு: கவிதை.

கவின்மகள் சுதாகரி மணிவண்ணன். செங்கலடி: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், ஏறாவூர்ப் பற்று, 1வது பதிப்பு, 2015. (செங்கலடி: மடோனா அச்சகம்). xviii, 68 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ.,