9363 தொடர்பாடல் மொழி நவீனத்துவம்: பிராந்திய தமிழ் மொழியியல் மாநாட்டு நிகழ்வுகள்.

எம்.ஏ.நுஃமான் (பதிப்பாசிரியர்). கொழும்பு 2: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 21, வொக்ஷோல் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு 2: ராஜன் பிரின்டர்ஸ், 31, கியூ ஒழுங்கை).

xii, 227 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 160., அளவு: 22×14 சமீ., ISBN: 955-9233-00-9.

தொடர்பாடல் மொழி நவீனத்துவம் என்ற பொதுத் தலைப்பில் 1992 மே மாதம் 7,8,9ஆம் திகதிகளில் கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மொழி வளர்ச்சி பற்றிய பிராந்தியத் தமிழ் மொழியியல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இதுவாகும். அறிமுகம், அமைச்சரின் உரை, மற்றும் இ.அண்ணாமலை அவர்களின்  டுயபெரயபநள ழக னுநஎநடழிiபெ ளுழஉநைவநைள  என்ற தலைப்பிலான தொடக்க உரை என்பவற்றைத் தொடர்ந்து  ஆய்வுக்கட்டுரைகள் நான்கு பகுதிகளாகப் பிரித்துப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. மொழி மாற்றமும் மொழி வளர்ச்சியும் என்ற முதலாம் பகுதியில், மொழி வளர்ச்சி: இலக்கணத் தூய்மையும் மொழித் தூய்மையும் (எம்.ஏ.நுஃமான்), புதிய தமிழ் இலக்கணம்: அதனை தேவையும் சிக்கல்களும் (அ.சண்முகதாஸ்), தற்காலத் தமிழ் இலக்கணம்: அதன் தேவையும் பிரச்சினைகளும் (கே.திலகவதி), தற்காலத் தமிழின் இலக்கண இயல்பு (செ.வை.சண்முகம்), மொழிப் புதுமையாக்கத்தில் அகராதியின் பங்கு (இ.அண்ணாமலை) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்பாடலும் மொழியும் என்ற இரண்டாம் பகுதியில் தற்காலச் செய்திப் பரிமாற்றத்தில் தமிழ்; சமுதாய மொழியியல் ஆய்வு (கி.கருணாகரன். வ.ஜெயா), தமிழிலே தொடர்பாடல்: இன்று நாம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் (சி.தில்லைநாதன்) ஆகிய கட்டுரைகளும், கலைச்சொல்லாக்கம் என்ற மூன்றாவது பகுதியில் தமிழில் கலைச்சொல்லாக்கம் (இராம சுந்தரம்), கலைச்சொற்களின் தொடர்பாடல் திறனும் புதுமையாக்கமும்(எல்.இராமமூர்த்தி) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. தமிழ் மொழி கற்பித்தல் என்ற இறுதிப் பகுதியில் தமிழில் இரட்டை வழக்கும் கற்பித்தல் பிரச்சினைகளும் (கி.அரங்கன்), தமிழ் கற்பித்தலில் மேனாட்டுச் செல்வாக்கு (சுப.திண்ணப்பன்),சொற்புணர்ச்சியும் மொழி கற்பித்தலும்: லகர ஈற்றுப் புணர்ச்சி பற்றி ஓர் ஆய்வு (சுபதினி ரமேஷ்), இலங்கையில் தமிழை இரண்டாவது மொழியாகக் கற்றலும் கற்பித்தலும் (சு.சுசீந்திரராஜா, இ.கயிலைநாதன்) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 102581).

ஏனைய பதிவுகள்

Lord Of The Ocean By Novomatic

Content Sevens&Fruits Slot móvel – Casinos Portugueses Licenciados Que Oferecem Anexar Lord Of The Ocean: Popular Greentube Slots Lord Of The Ocean Slot Game Images

14399 கிராமிய வழிபாடு.

மு.மனோகரன். கொழும்பு 6: மு.மனோகரன், வானதி வெளியீடு, 100/16, றொபேட் குணவர்த்தன மாவத்தை, கிரிலப்பனை, 1வது பதிப்பு, ஜுன் 2000. (கொழும்பு 6: வின்னர்ஸ் அச்சகம், 30, நிஹால் சில்வா மாவத்தை, கிரிலப்பனை). vi,