9416 உயிரியல் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.

வி.கே.கணேசலிங்கம். கொழும்பு: க.வி.குகாதரன், 1வது பதிப்பு, 2007. (கொழும்பு 6: பரணன் அசோஷியேற்ஸ், 403 1/1, காலி வீதி).

vii, 113 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 29×21 சமீ., ISBN: 978-955-98185-7-1.

இரு பாகங்களைக் கொண்ட இந்நூலின் முதலாம் பாகமான உயிரியல் விஞ்ஞானம் (Biological Science) உயிரினத் தோற்றம், கூர்ப்புக் கொள்கைகள், இயற்கைத் தேர்வு, இசைவாக்கம், இயற்கைச் சமநிலை, மனிதனும் இயற்கையும், இயற்கை வளங்கள், விவசாயம், விலங்கு வேளாண்மை, தீங்கு விளைவிக்கும் பூச்சிகள், பூச்சிப் பீடைகளைக் கட்டுப்படுத்தல், உலக சூழல் மாசடைதல், மாசடைதலைக் கட்டுப்படுத்தல், வளர்ப்பு மிருகங்கள், சிறிய அளவில் சுற்றாடலை மாசாக்கல், விலங்குகளின் அழிவு, மருத்துவ நோயாக்கிகள், கூட்டமாய் வாழும் பிராணிகள், மனித இனத்தின் தோற்றம் ஆகிய 19 இயல்களைக்கொண்டது. இரண்டாம் பாகமாகிய தொழில்நுட்பம் (Technology), உயிரியலும் தொழில்நுட்பமும், மனித உயிர் வாழ்க்கையும் உயிரியல் தொழில்நுட்பமும், மரபணு மாற்றம்பெற்ற உணவுகள், பொறியியல் தொழில்நுட்பம், மரபியல் பொறிமுறை, மருத்துவ தொழில்நுட்பம், சக்தி தொழில்நுட்பம், போக்குவரத்து தொழில்நுட்பம், பாதுகாப்பு தொழில்நுட்பம், வானசாஸ்திர தொழில்நுட்பம், வானூர்தித் தொழில்நுட்பம், இலத்திரனியல் தொழில்நுட்பம், மீள் சுழற்சி தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு தொழில்நுட்பம், கணனி மூலம் கல்வி: ஒரு புரட்சி, மரபணு முறையில் இனங்காணல்,  ஆகிய 16 தலைப்புகளில் விடயங்களை உள்ளடக்கியது. சமாதான நீதவானான பேராசிரியர் வி.கே.கணேசலிங்கம், பருத்தித்துறை, கந்த உடையார் ஒழுங்கையைச் சேர்ந்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 174276).

ஏனைய பதிவுகள்

Casinorating

Content Moyens De credits Véritablement Connus Concernant les Champions Québécois: playn go jeux de machines à sous Software De jeux Efficace Faites Appel Au Comparatif