9415 உயிரியல் அறிவை அளவிடுங்கள்: பயிற்சிகள்.

ஆர்.கே. இராஜசேனன், ஏ.குலேந்திரன், எம்.பரமானந்தன். யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 400, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 400, காங்கேசன்துறை வீதி).

viii, 218 பக்கம், விளக்கப் படங்கள், விலை: ரூபா 3.50, அளவு: 21×14 சமீ.

உயிரியல் பாடவிதானத்தில் அடங்கிய முக்கியத்துவங்களையும் ஆற்றல்களையும் விதிகளையும் சுலபமாக அறிந்துகொள்ளும்வண்ணம் இந்நூலின் அலகுகளும் வினாக்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கின்றன. உயிரும் அவற்றின் இயல்புகளும், பச்சைநிறத் தாவரங்களின் போசணை, உணவு, உணவுக் கால்வாயும் அதனுடன் சம்பந்தமான சுரப்பிகளும், சமிபாடு, அங்கிகளிற் கடத்தல், சுவாசித்தல், கழிதல், தாவரங்களும் விலங்கினங்களும் அசைதல், அசைவின் இயைபாக்கம், இனப்பெருக்கம், புத்துயிர்ப்பு, தாவரங்களில் வளர்ச்சி, கூர்ப்பும் பரம்பரையும், பொருளாதார முக்கியத்துவமுள்ள தாவரங்களும் விலங்குகளும், அன்றாட வாழ்க்கையில் நுண்ணுயிர்களின் பங்கு, விசேட போசணை முறை, கூட்டுறவு வாழ்க்கை, மண் உண்டாகுதல், சூழலியல், கதிர் தொழிற்பாடுடைய வீழ்ச்சி, இயற்கையின் சமநிலை ஆகிய 22 இயல்களாக  இவை வகுக்கப்பட்டுள்ளன. 5 மாதிரி வினாத்தாள்களும், க.பொ.த.பரீட்சை வினாக்களும் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளன. மாணவர் தாமே தாம் அறிந்தவற்றை அளவிடவும் பாடவிதானத்தை மீட்டுக்கொள்ளவும் உதவும் வகையில் இந்நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர்கள் மூவரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆசிரியர்களாவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  84690). 

ஏனைய பதிவுகள்

16705 யாழ்ப்பாணத்தான்: 23 சிறுகதைகள்.

பொன்.குலேந்திரன். கனடா: குவியம் வெளியீடு, 2796, Keyness Crescent, Mississauga, Ontario, L5N3A1, 1வது பதிப்பு, ஜீன் 2020. (மின்நூல் வடிவம்). 168 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5ஒ14.5 சமீ. யாழ்ப்பாண மாவட்டத்தைப்

Betano Bonus Fără Achitare 2024

Content Bonus Luck 77 Rotiri Gratuite Casa Pariurilor Bonus Fără Plată: 600 Rotiri Gratuite Deasupra 30 Zile Excelbet Rotiri Gratuite Dar Vărsare Oferte Gets Bet