9471 இலங்கையில் தமிழர் பாரம்பரியப் பிரதேசம்: விவசாய வளமும் பயன்பாடும்.

இராசரத்தினம் சிவச்சந்திரன். யாழ்ப்பாணம்: அகிலம் வெளியீடு, இல. 7, ரத்தினம் ஒழுங்கை, காங்கேசன்துறை வீதி, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, மார்ச் 1996. (யாழ்ப்பாணம்: ஜோசப் பாலா, மணிஓசை அச்சகம், 12, சென் பற்றிக்ஸ் வீதி).

96 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21.5×14 சமீ.

வட-கிழக்குப் பிரதேசங்களின் விவசாயவளம் மற்றும் பயன்பாடு பற்றி முக்கியமாக இந்நூல் பேசுகின்றது. மனித வளம் (குடித்தொகைப் பண்புகள்), விவசாய வளமும் நீர்வளமும், விவசாயத் தொழில்துறைக்கான விரிவாக்கம், எமக்குப் பொருத்தமான மாற்றுச் சக்திவளம், வன்னிப் பிரதேச விவசாயப் பிரச்சினைகளும் அபிவிருத்தியும் ஆகிய தலைப்புகளில் இந்நூல் பல்வேறு பொருளாதார, விவசாய, புவியியல் விபரங்களைத் தருகின்றது. இரா. சிவச்சந்திரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவிவியல்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப்  பணியாற்றியவர். 1972இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகத் தன் பணியைத் தொடங்கியவர். 1975-78 காலகட்டத்தில் களனிப் பல்கலைக்கழகத்திலும், 1979முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் தன் பணியைத் தொடர்ந்தவர். 1972இல் ஊற்று அறிவியல் ஏட்டின் உருவாக்கத்தில் முக்கிய பங்களிப்புச் செய்திருந்த இவர், பூரணி இலக்கிய இதழினதும், 1975இல் அகிலம் என்னும் சமூக அறிவியல் ஏட்டினதும்  ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 118328).

ஏனைய பதிவுகள்

Königlich Panda Casino

Content What Exactly Welches A Guaranteed Distance To Call Find Out This Here Home Clear Of Utility Lines? Up Usability, App Ferner Zuverlässigkeit Des Verbunden