9475 நாட்டிற்கு நயம் தருவன: விவசாயக் கைந்நூல்.

பொன்னையா மாணிக்கவாசகர். நீர்வேலி: வலி-கிழக்கு தென்பகுதி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், 1வது பதிப்பு, 1975. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி, சுண்டிக்குளி).

(8), 260 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

விவசாய விரிவாக்க உத்தியோகத்தராகக் கடமையாற்றிய மேலைப்புலோலியூர் பொன்னையா மாணிக்கவாசகர் எழுதிய நூல். யாழ் குடாநாட்டின் தோற்றலும் யாழ் மாவட்ட மண்ணின் மாண்பும், யாழ் மாவட்ட நீர்வளமும் விநியோகமும், சிறுதோட்ட உளவு இயந்திரங்கள், நெல் வேளாண்மை, சிறுதானியம் (சோளம், இறுங்கு, குரக்கன், சாமை, பனிச்சாமை, வரகு, தினை), கிழங்கினம் (சிறுவள்ளி, கொடிவள்ளி, மரவள்ளி, வத்தாளை, சட்டிக்கரணை, உழவர்க்கு உகந்த உருளைக்கிழங்கு), சரக்கு வகை (மிளகாய், செஞ்சுடர் சந்தக்கா, சிறுவெங்காயம், பெரிய வெங்காயம், கடுகு, கொத்தமல்லி, வெந்தயம், சீரகம்), பருப்பு இனப் பயிர்கள் (துவரை), சர்க்கரை இனப் பயிர் (சீனிபீற்), எண்ணெய்ப் பயிர் (சோயா அவரை, நிலக்கடலை, சூரியகாந்தி, எள், முத்தாமணக்கு), தும்புப் பயிர்கள் (சணல், புளிமஞ்சி, பருத்தி), மரம் நாட்டு விழா, அறியாமையாலும் அவதானக் குறைவாலும் ஆபத்து விளையும், அரசாங்க உத்தரவாத கொள்வனவுத் திட்டத்தின் விலைப் பட்டியல், அளவைகள்ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85166).   

ஏனைய பதிவுகள்

10523 ஓளி ஏற்றிடு.

கு.நாகேந்திரன். புத்தளம்: கலை இலக்கிய வட்டம், 23/1 ஜே.பி. வீதி, 5-ம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000.(கொழும்பு 11: கே.ஏ.அச்சகம், எஸ்.19, 3வது மாடி, கொழும்பு மத்திய கூட்டுச் சந்தைத் தொகுதி).

Stake7 Com

Content Stake7 Erfahrungen And Echter Erprobung 2023 Welches Bietet Nachfolgende Stake 7 Casino App? Welches Stake7 Spielbank bietet die eine große Auswahl an Aufführen, Angeboten,

10735 இதயத் தந்திகள் மீட்டப்படுகின்றன.

வே.தில்லைநாதன். கொழும்பு 14: வீரகேசரி வெளியீடு, த.பெட்டி எண் 160, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன் பிரைவேட் லிமிட்டெட், 185, கிராண்ட்பாஸ் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 1978. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் சிலோன்