9476 பசளைகளும் அவற்றின் பயன்பாடும்: கைநூல்.

நூல் வெளியீட்டுக் குழு. யாழ்ப்பாணம்: திட்டமிடற் பணியகம், செயலகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம்).

24 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

யாழ் மாவட்ட அரச அதிபரும் மாவட்டச் செயலாளருமான வை.மு.பஞ்சலிங்கம் அவர்களின் பணிக்காலத்தில் இக்கைநூல் வெளியிடப்பட்டது. 1985இல் செப்டம்பர் 23-29ஆம் திகதிகளில் தேசிய உரவாரம் கொண்டாடப்பட்ட வேளையில் அதன் நினைவாகவும், மக்களிடையே உரப்பாவனை தொடர்பான விழிப்புணர்வினை ஊட்டும் வகையிலும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. விவசாயப் போதனாசிரியர் வ.கதிரமலை, விவசாய விரிவாக்க உதவிப் பணிப்பாளர் செ.கிருஷ்ணபிள்ளை, விவசாய ஆராய்ச்சித் துறைப் பணிப்பாளர் த.குகதாசன், விவசாய ஆராய்ச்சியாளர் க.தேவசபை ஆகியோரின் கூட்டு முயற்சியில் இந்நூல் உருவாகியுள்ளது.  (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 85470).    

ஏனைய பதிவுகள்

10249 நிறுவனத் திட்டமிடல்: தந்திரோபாய முகாமைத்துவத்திற்கான ஓர் அணுகுமுறை.

கணேசசுந்தரம் ரகுராகவன். மட்டக்களப்பு: க.ரகுராகவன், யுனைட்டட் வெளியீடு, வர்த்தக முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், செங்கலடி, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (சென்னை 26: குமரன் பதிப்பகம், 12/3 மெய்கை விநாயகர் தெரு, குமரன்