9477 கோழி வளர்ப்பு.

கு.சதாசிவமூர்த்தி. சாவகச்சேரி: திருமதி கு.சதாசிவமூர்த்தி, சங்கத்தானை, 1வது பதிப்பு, மே 1993. (யாழ்ப்பாணம்: சு.வே.அச்சகம், 104, கஸ்தூரியார் வீதி).

(2), 64 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10., அளவு: 20.5×14 சமீ.

வடபகுதியில், இலங்கை அரசின் பொருளாதாரத் தடையின் விளைவாக ஏற்பட்ட பத்திரிகைத்தாள் தட்டுப்பாட்டுக் காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நூல். பயிற்சிக்கொப்பித் தாளில் (கோட்டுத்தாள்) அச்சிடப்பட்டுள்ளது. நூலாசிரியர் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். அறிவியல்ரீதியாக கோழிவளர்ப்புப் பற்றிக் கற்போர் மட்டுமன்றி, பாரம்பரிய ரீதியாகப் பொதுவான கோழிவளர்ப்பில் ஈடுபட்டுள்ளோரும் இந்நூலை வாசித்துப் பயன்பெற வேண்டும் என்ற நோக்குடன் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. கோழிவளர்ப்பு, கோழி வளர்ப்பிலுள்ள பிரச்சினைகள்,  கோழி வளர்ப்பு முறைகள், கோழி இனங்கள்,  வளர்ப்புக் கோழிகளைத் தெரிதல், இறைச்சி உற்பத்திக்கான கோழிகளைத் தெரிதல், அடைவைத்தல், நாட்குஞ்சு வளர்த்தல், கோழிகளைப் பராமரித்தல், கோழியின் இனப்பெருக்கத் தொகுதி, கோழியின் சமிபாட்டுத் தொகுதி, கோழியின் வீடமைப்பு, கோழி உணவும் உணவூட்டலும், கோழி நோய்கள், பொதுவான கோழிவளர்ப்பு ஆகிய 15 தலைப்புகளில் இந்நூல் விரிவான தகவல்களைத் தருகின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 106040).

ஏனைய பதிவுகள்

15517 கடலோரத் தென்னைமரம்.

கவிமணி நீலாபாலன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2013. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). xviii,