9512 இந்து விக்கிரகக் கலை மரபில் சிவ வடிவங்கள்.

ப.கோபாலகிருஷ்ண ஐயர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ் பிரின்டர்ஸ், 94 பரமானந்த விகாரை மாவத்தை).

xxxix, 665 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 23×15 சமீ.

ஒன்பது இயல்களைக் கொண்டமைந்த இந்நூல் மூல நூல்களின் மரபும் சிவ விக்கிரகவியல் வரலாறும், படிமவகைகள், விக்கிரகக் கலை, சிவ விக்கிரகங்கள் அமைக்கும் முறை, சிற்பக் கலைஞர் தகைமை, சிவனது பல்வேறு படிமங்கள் ஆகிய பல்வேறு விடயங்களை உள்ளடக்குகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கலாநிதிப் பட்டத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வேடு இதுவாகும். அறிமுகம், மூல நூல்களின் மரபும் சிவ விக்கிரகவியல் வரலாறும், படிம வகைகள், விக்கிரகக் கலை, சிற்பக் கலைஞன், சிவனது தெய்வ வரலாற்றியல், பல்வேறு தோற்றங்களில் சிவனின் வடிவமைப்பு, சிவனின் வடிவங்கள் வளம்படுத்திய பண்பாட்டுத் துறைகள், நிறைவாகச் சில சிந்தனைகள் ஆகிய ஒன்பது இயல்களில் இந்நூல் ஆக்கம்பெற்றுள்ளது. பேராசிரியர் ப.கோபாலகிருஷ்ண ஐயர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகைசார் பேராசிரியராவார்.

ஏனைய பதிவுகள்

Finest A real income Ports

Content Below are a few Gambling establishment Bonuses What is A modern On the web Slot? Find An internet Position Game Camden Dominates Inside the