9518 தமிழ்க் கூத்துக் கலை: வடமோடி ஆட்டப் பயிற்சிக்கான கைந்நூல்.

சி.மௌனகுரு.  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 2010. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

164 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-422-5.

இந்நூல் ஏழு பிரிவுகளை உள்ளடக்கியது. முன்னுரைகள், தமிழ் ஒபெரா அறிமுகம், ஆட்ட அறிமுகம், வடமோடி நாடகங்களிற் கையாளப்படும் தாளக்கட்டுக்கள், பாடல்கள், விரிவுரைகளுக்கான தலைப்புக்கள், தமிழ் நடன (கூத்து) இசை நாடகத்திற்கான 3 வருடப் பாடத்திட்டம் ஆகிய பிரிவுத் தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சீன ஜப்பானிய ஒபெரா வகைகள் உலக மேடைகளில் இராஜநடைபோடுவதைப் போல, தமிழ் ஒபெராவும் உலக அரங்கில் நடைபோட முதல் விதை நோர்வேயின் தலைநகரமான ஒஸ்லோவில் 2009 ஆவணி மாதம் 30ஆம் திகதி ஒஸ்லோ இசை கலாசாரக் கல்லூரியில் பேராசிரியர் சி.மௌனகுருவின் தலைமையில் போடப்பட்டது. இதன் பின்புலத்தில் நடன ஆசிரியை தமிழினி சிவலிங்கம், இசை ஆசிரியை வாசுகி ஜெயபாலன் ஆகியோர் இருந்துள்ளனர். இந்நூலின் முதற்பதிப்பினை நோர்வே யிலுள்ள ஒஸ்லோ இசை கலாச்சாரக் கல்லூரி 2010இல் வெளியிட்டிருந்தது.  தமிழ்க் கூத்து மரபுகளை ஐரோப்பிய ஒபெரா மரபுடன் ஒப்பிடும் சிறு முன்னுரையுடன் தொடரும் இந்நூலில் கூத்துக்கலையைக் கற்கவிளையும் மாணவர்களுக்கு ஆட்ட அறிமுகமும் ஆட்டப் பயிற்சிகளும் நிபுணத்துவம் வாய்ந்த முறையில் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. ஆட்டக் கோலங்கள் அமையும் முறை ஏற்ற குறியீடுகளுடனும் படங்களுடனும் விளக்கப்பட்டுள்ளன. இவ்வாட்ட முறைகள்ஆண்-பெண் பாத்திரங்களுக்கு வெவ்வேறு முறையில் அமைவதால் அதற்கேற்ப பயிற்சி விளக்கமும் தரப்பட்டுள்ளது. மேலும் வீரர்களின் குதிரைச்சவாரி, தேரோட்டம், குரங்குகள் என்பவற்றுக்கு ஏற்றபடி விளக்கம் தரப்படுகின்றது. வடமோடி ஆடற் பயிற்சிக்கான கைந்நூலாக இது எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் சி.மௌனகுரு நாட்டாரியலும் அரங்கியலும் என்ற துறையில் இடம்பெறும் கூத்துக்கலையை ஒரு தனியான கற்கைநெறியாக இனம்கண்டு அதன் வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டுவருபவர். இப்பணியின் ஒரு படியாக இப்பயிற்சிநூல் அமைகின்றது.

ஏனைய பதிவுகள்

17785 பாடித் திரிந்த பறவைகள்.

இரா.கிருஷ்ணபிள்ளை (புனைபெயர்: இராகி), மட்டக்களப்பு: இந்து சமய விருத்திச் சங்கம், காரைதீவு, 1வது பதிப்பு, மார்ச்; 2016. (சாய்ந்தமருது: ரோயல் அச்சகம்). viii, 154 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14.5 சமீ.

9673 ஓ கே குணநாதன் நகைச்சுவைக் கதைகள்.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: பிரியா பிரசுரம், 64, கதிராமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1993. (கொழும்பு 14: நிரோஷன் பிரின்டர்ஸ், 103 B,  பாபா புள்ள பிளேஸ்). 64 பக்கம், சித்திரங்கள், விலை:

Free online Slots!

Posts Best casino sites that accept crypto: Do you want in order to go on a vibrant travel on the field of casinos on the