ச.யேசுதாசன். முருங்கன்: புனித சூசையப்பர் ஆலய மேய்ப்புப்பணி சபை, கற்கிடந்த குளம், 1வது பதிப்பு, மே 2009. (வவுனியா: வாணி அச்சகம், இல.61B, 1ம் குறுக்குத் தெரு).
xix, 129 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ.
வாசாப்பு என்பது வசனம் கலந்த பாட்டு எனப் பொருள்பெறும். வாசாப்பு – வாசகப்பாவின் மருவிய வடிவம் என்பர். இந்நூல் மனுவேற் புலவரின் சற்பிரசாத வாசாப்பு என்ற நாடக நூல் பற்றிய ஆய்வாகும். சற்பிரசாத வாசாப்பு-உள்ளக நோக்கும் அரங்கேற்ற மரபுகளும் (சூழலும் பின்னணியும், சற்பிரசாத வாசாப்பின் கதைச்சுருக்கம், பாத்திரங்களும் பணிகளும், சற்பிரசாத வாசாப்பின் தனித்துவம், ஏட்டின் அமைப்பு, களரி அமைப்பும் சம்பிரதாய நிகழ்வுகளும், வார் வளைதல், அரங்கேற்றத்திற்கான முன்னாயத்த முயற்சிகள், அரங்கெற்றம் முடிந்ததும் முன்னெடுக்கப்படும் கொண்டாட்டம், பாரம்பரிய நம்பிக்கைகள்), வாசாப்பு வரலாற்றில் நினைக்கப்படவேண்டியவர்கள்(ஆதித்த நாடார் மனுவேல் புலவர், பிறஞ்சி சம்பாய்வ புலவர், ஆதித்த நாடார் மனுவேல் மடுத்தீன் எனப்படும் முத்தையா புலவர், ஆதித்த நாடார் மனுவேல் மடுத்தீன் எபிலோனியா, சூசைப்பிள்ளை தொம்மை, தொம்மை பாக்கியநாதன், அந்தோனி சில்வா பிரான்ஸீஸ் சில்வா, அந்தோனி சில்வா பிலிப்பு சில்வா), சற்பிரசாத வாசாப்பு ஏட்டில் உள்ளவை (சான்றோர் விருது நாடகம் சற்பிரசாத வாசாப்பு, பொது மங்களம்)ஆகிய பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள கற்கிடந்தகுளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர், 2006-2008 காலப்பகுதியில் சொலிடார் நிறுவனத்தின் இணைப்பாளராக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பணியாற்றியவர். இறையியல்,மெய்யியல்மாணிப் பட்டப்படிப்பினை நிறைவுசெய்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 234597).