க.தங்கராஜா (புனைபெயர்: ஆலையூரான்). திருக்கோணமலை: திருமதி. கோ.தங்கராஜா, 1வது பதிப்பு, 2006. (வத்தளை: கிறிப்ஸ் பிரின்டேர்ஸ், 70ஃ7, கனல் வீதி, ஹெந்தளை).
v, 64 பக்கம், விலை: ரூபா 125., அளவு: 25×19.5 சமீ., ISBN: 955-99552-0-9.
இச்சிறுவர் நாவல், தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் சுனாமி சிறுவர் நூல் வெளியீட்டுச் செயற்றிட்டத்தில் 2005/2006 அனுசரணையுடன் வெளியிடப்பட்டது. அமரர் க.தங்கராஜா அவர்கள் ஆலங்கேணிப் பாடசாலை, வந்தாறுமூலை மத்திய கல்லூரி, மட்டக்களப்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி, யாழ்ப்பாணம், பேராதனைப் பல்கலைக்கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் கற்றுத்தேர்ந்தவர். சிறந்ததொரு ஆசிரியராகவும், அதிபராகவும் திருக்கோணமலை, வவுனியா மாவட்டங்களில் பணியாற்றியவர். இந்நாவல் சிறுவருக்கென விறுவிறுப்பான கதையம்சத்துடன் எழுதப்பட்டது. நிலாவெளிக் கிராமத்தின் இயற்கை அழகையும், மக்களின் வாழ்வுமுறையினையும், சிறுவர்தம் மன இயல்பினையும், சுனாமியின் தாக்கத்தினால் பின்னர் சின்னாபின்னமான அம்மக்களையும், சுனாமியில் அல்லலுற்ற அக்கிராமத்தின் சிறார்களின் மனத்துடிப்பையும் அவர்களைக் கொடுமைப்படுத்தும் சமூகப் பெருச்சாளிகளையும் இந்நாவலில் வெளிச்சம் பாய்ச்சிக் காட்டுகின்றார்;. சிறுவர்களிடையே துணிச்சலை வளர்த்தெடுத்துச் செல்வதையும், அவர்கள் தாங்களே சிந்தித்துச் செயலாற்றுவதையும் இந்நாவலில் காணலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217239).