சுதாகினி டெஸ்மன் றாகல். கொழும்பு: கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிரிபாய, பத்தரமுல்லை, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அத்துள்கோட்டை: ஏ.எஸ்.அச்சுப் பதிப்பகம், 656 கோட்டை வீதி).
iv, 16 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29.5×21.5 சமீ., ISBN: 978-955-9117-29-2.
தாய் நாட்டின் மரபுரிமை பிள்ளைகளுக்கே என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அரச ஊழியர்களுக்கிடையிலான ஆக்கத்திறன் போட்டித் தொடர் -2013க்காகத் தேர்வு செய்யப்பட்டு அச்சிடப்பட்ட சிறுவர் கதை நூல் இது. கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர்களான திருமதி சுபாசினி கிருபாகரன், சுபாசினி கேசவன் ஆகியோர் முறையே பதிப்பாசிரியராகவும் உதவிப்பதிப்பாசிரியராகவும் செயற்பட்டுள்ளனர். முழுமையாக காட்டு விலங்குகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட சிறுவர் கதை. சொர்க்கவனத்தில் கர்வத்துடன் திரிந்த மயில் அக்காவைத் திருத்தி வழிக்குக் கொண்டுவரும் கதை.