9576 என் பேனாவின்  நிதர்சனம்.

சமரபாகு சீனா உதயகுமார். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 1வது பதிப்பு, செப்டெம்பர்2013. (மஹரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).

108 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-53921-6-7.

சீனா உதயகுமாரின் இந்தக்கவிதைத் தொகுதியில் உள்ள இருபத்தியொரு கவிதைகளில் அனேகமான கவிதைகள், ‘ஞானம்’ சஞ்சிகையில் பிரசுரமானவை. ஒரு தொகுப்பாக ஒன்று சேர வாசிக்கும் போது இக்கவிதைகளில் ஒரு பொதுமைப்பாட்டைக் காணமுடிகிறது. அதேவேளை இக்கவிதைகளின் பாடுபொருட்களை வகுத்தும் தொகுத்தும் சிலபரிமாணங்களை நோக்கமுடிகிறது. இக்கவிதைத் தொகுதியில் உள்ள அத்தனை கவிதைகளும் புதுக்கவிதைகள். இத்தொகுதியில் உள்ள சீனா உதயகுமாரின் கவிதைகள் பலவும் போர் இலக்கியம் சார்ந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. போரின் அவலங்களையும் கொடுமைகளையும் துன்ப துயரங்களையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன.அநேகமாக இறுதிப் போரின் பிந்திய விடயங்களை, போர் தந்த பரிசுகளை,போர் விட்டுச் சென்ற கேள்விகளை, இன்றும் பலரிடம் நிழலாடும் சந்தேகங்களை மர்மங்கள் வெளிக்காதா என்ற வேணவாவை, ஏக்கங்களை, பாடுபொருட்களாகக் கொண்டவையாகவே அதிகம் விளங்குகின்றன. சீனா உதயகுமார், வல்வெட்டித்துறையில் சமரபாகு என்ற இடத்திலுள்ள கூனன் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 238083).

ஏனைய பதிவுகள்

Download and run to the android and ios

Blogs Smart phone Software to have apple’s ios: Lobstermania online casino games casino bonus Unit Alternatives for PlayAmo Application Obtain PlayAmo application bottom line –

Brandneue Spielsaal Provision Codes

Content Erreichbar Casinos Über Irgendeiner Mindesteinzahlung Durch Geringer Als 5 Eur Für nüsse Spielbank Prämie Bloß Einzahlung 2024 Faq In hinblick auf Online Casinos Qua