9620 நான் மறைய வேண்டும்.

ப.விக்ரம் தீபநாதன். மன்னார்: அருவம் வெளியீடு, எழுதூர், 1வது பதிப்பு, வைகாசி 2009. (கொழும்பு 12: Happy Digital Centre, Digital Offset Press, No 75, 1/1 Sri Sumanatissa Mawathe).

66 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 26ஒx17.5 சமீ., ISBN: 978-955-51688-1-0.

மன்னார் மாவட்டத்திலிருந்து வெளியாகிய கவிதைத் தொகுப்பு இது. உலகம் உருவானது இங்கே என்ற தலைப்புடன் தொடங்கி 39 தனித்துவமான கவிதைகளைக் கொண்ட தொகுதியாக மலர்ந்துள்ளது. மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்து மறைந்த புலவர்களுள் ஒருவர் குப்பையர் என்ற மனுவேல் மொறாயஸ் (1833-1878).அவர் எழுதிய நாடகங்களுள் சந்தொம்மையார் வாசகப்பாவும் ஒன்று. இது மன்னார் மக்களால் பெரிதும் கவரப்பட்டது. அதிலுள்ள சில பாடல்களும் இத்தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. உலகின் சமூகப் பிரச்சினைகளை அவதானித்து அதன் காரணமான சமூகத்தைக் கண்டித்தும் எச்சரித்தும் பின் அதற்கான தீர்வினையும் இந்தக் கவிஞர் முன்வைக்கின்றார். நூலாசிரியர் ஒரு அக்யுபஞ்சர் வைத்தியராவார். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒழிந்திருக்கும் நான் என்ற அகந்தை மறைந்துவிடவேண்டும். அதுவே உலக விடுதலைக்கு வழி என்கிறார் இக்கவிஞர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 209851).                                                                                                                                                                                                           

ஏனைய பதிவுகள்

Columbus Deluxe Slot 2024 Wager Free online Here

Content Vergleichen Eltern Columbus Slot unter einsatz von folgenden Aufführen: eggomatic 150 kostenlose Spins Spielanleitung unter anderem Darstellung Columbus für nüsse vortragen Our Favourite Casinos