9621 நிலவுப்பொழுதின் நினைவலைகள்.

வவுனியா சுகந்தினி (இயற்பெயர்: திருமதி சந்திரமோகன் சுகந்தினி). வவுனியா: வவுனியா தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (வவுனியா: சன் பீம் கிரியேஷன்ஸ், இல.107, 1வது மாடி, பேருந்து நிலையக் கட்டடத் தொகுதி).

54 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×15 சமீ.

வவுனியா வெளிக்குளத்தைச் சேர்ந்த சுகந்தினி தனது அனுபவத்தையும் கற்பனையையும் இணைத்து இக் கன்னிக் கவிதைத் தொகுதியை வழங்கியுள்ளார். தாய், அன்பு, இயற்கை, காதல், உறவு, போதைப்பொருள், சீதனம், சேமிப்பு, என்று 27 தலைப்புகளில் இவரது கவிதைகள் விரிகின்றன. என் அன்னையே என்ற கவிதையில் தாய்ப்பாசத்தைக் கொட்டித் தீர்க்கிறார். பெண்ணைப்பற்றிய கவிதையில் காதல் கைகூடாவிட்டாலும், கணவன் கைவிட்டாலும் கல்வி கைகொடுக்கும் என்கிறார். போதைப்பொருள் பாவனைக்கு எதிரான கவிதையில் குடியைக்கெடுக்கும் குடியைக் கைவிடுங்கள் என்று ஒட்டுமொத்த பெண்ணினத்தின் சார்பாகவும் ஆண்களிடம் வேண்டுகோள் விடுகின்றார்.

ஏனைய பதிவுகள்

Usa Totally free Revolves No

Posts The Decision To own 2024 50 Free Revolves Sale Free Spins And Acceptance Incentives For brand new Zealand Nine Local casino: 30 Free Revolves