9641 விபுலாநந்தக் கவிமலர்.

அருள் செல்வநாயகம். (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா அச்சகம், 234 காங்கேசன்துறை வீதி).

xxiii, 128 பக்கம், தகடுகள்;, விலை: ரூபா 3.25, அளவு: 21.5×14 சமீ.

நூலாசிரியர் மட்டக்களப்பு குருமண்வெளியைச் சேர்ந்தவர். விபுலாநந்த இலக்கியம் என்ற ஒரு இலக்கியத்தை இனம்கண்டு, சுவாமி விபுலாநந்தர் பற்றிய பல நூல்களையும், விபுலாநந்தரின்  கையெழுத்துப் பிரதியாகவிருந்த பல கட்டுரை, கவிதைகளையும் தேடித் தொகுத்துத்  தனி நூல்களாக வெளியிட்டவர். அவ்வகையில் இந்நூல் சுவாமி விபுலாநந்தரின் நாநலங் கனிந்த, உணர்ச்சியின் உறைவிடமான, வளமார்ந்த இலக்கியச் சுவைமிக்க கவிதைகளைக் கோவைசெய்து  விபுலாநந்த இலக்கியத்தின் ஆறாவது தொகுதியாக வெளியிட்டுள்ளார். அடிகளார் ஒப்பற்ற கவிஞர். உலக முதல்வனான இறைவனை, தெய்வங்கள் உறையும் கோயில்களை, மனதில் இடம்கொண்ட பெரியார்களை, பரமஹம்சதேவரின் அருள்வாக்குகளை என்று பல்வேறு பாடல்களையும் பிற மொழிப்பாடல்களின் மொழிபெயர்ப்புகளையும்  இவர் நமக்கு வழங்கியுள்ளார். இவை அனைத்தையும் நான்கு பகுதிகளாக வகுத்து இந்நூலில் வழங்கியுள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 87168).

ஏனைய பதிவுகள்

Mucchio Admiral Gibraltar

Content Federico Freni Mef Sul Revisione Del Inganno Pubblico Confusione Admiral Mucchio Admiral San Roque Un Favore Clientela Verso Tua Decisione Separatamente Del Nostro Casino