9662 ஆயுத வரி: சிறுகதைகள்.

அ.இரவி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 2013. (சென்னை 600029: மைக்ரோ பிரின்ட், நெல்சன் மாணிக்கம் தெரு, அமிஞ்சிகரை).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 130., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-81969-78-6.

யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1960இல் பிறந்த அ.இரவி, தெல்லிப்பழை, மகாஜனக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்து 1982இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சென்று, தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்று 1986இல் பட்டதாரியானவர். பின்னர் அதே பல்கலைக்கழகத்தில் 1992இல் அரங்கியலில் முதுகலைமாணிப் பட்டமும் பெற்றார். 1995இல் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்வியியல் டிப்ளோமா சான்றிதழ் பெற்று பத்தாண்டுக்காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். புதுசு, சரிநிகர், புலம், ஒரு பேப்பர் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவில்  இவரும் ஒருவர். லண்டனில் வானொலி தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர். தனது 20ஆவது வயதில் எழுதத் தொடங்கிய அ.இரவி, பேராசிரியர் கா.சிவத்தம்பியின் பாராட்டையும் பெற்றவர். இந்நூலில் ஜனநாயக வரி என்ற தலைப்பில் நிலாந்தனின் அறிமுகமும், நெருப்பில் பற்றியெழ நெய்யிட்டோர் என்ற தலைப்பில் ஆசிரியரின் உரையும்,  தொடர்ந்து அ.இரவியின் ஆயுதவரி, கானல் வரி, எழுந்த ஞாயிறு விழுந்ததன் பின், அதிகாரி, சக பயணி ஆகிய ஐந்து சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Diamond Colors Artwork Game

Posts Stop Thief! Contacting All Detectives! Individual Vision Provides Work to Do Inside Diamond Detective Almost every other Games In this Show Ideas on how