காவலூர் இராசதுரை. சென்னை 14: தமிழ்ப் புத்தகாலயம், 393 பைகிராப்ட்ஸ் (Pலஉசழகவள)சாலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1961.(சென்னை 14: வ.விஜயபாஸ்கரன், சரஸ்வதி பிரஸ், பைகிராப்ட் சாலை).
xvi, 95 பக்கம், விலை: இந்திய ரூபா 1.50, அளவு: 18×13 சமீ.
பேராசிரியர் கா.சிவத்தம்பியின் முன்னுரையுடன் கூடிய சிறுகதைத் தொகுப்பு. சரஸ்வதி வெளியீடு என்ற தொடரில் நான்காவதாக வெளியிடப்பட்டுள்ளது. தேவகிருபையை முன்னிட்டு வாழும், பிள்ளையார் பிடிக்க, நாயிலும் கடையர், தொட்டாற்சுருங்கி, குழந்தை ஒரு தெய்வம், பேடி, வீழ்ச்சி, கல்வி, மோதிரம், பிரிய தத்தத்தினாலே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தினகரன், வீரகேசரி, உதயன் ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமானவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35166).