9692 திசைகாட்டி மரம்: ஈழத்து சிறுகதைகள்.

வடலி குழுவினர். சென்னை 600078: வடலி வெளியீடு, எண் 6/13, சுந்தரர் தெரு, எம்.ஜி.ஆர். நகர், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை).

126 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.

இலங்கையில் தினக்கரல் பத்திரிகையுடன் இணைந்து சென்னை வடலி பதிப்பகம் மேற்கொண்ட இளம் படைப்பாளிகளுக்கான சிறுகதைப் போட்டியில் பரிசுக்குரியவையாகத் தேர்ந்த கதைகளின் தொகுப்பு இதுவாகும். இனியும் முட்செடிகள் முளைக்கலாம், வெறி, விபச்சாரி, எச்சங்களும் மிச்சங்களும், பைத்தியக்காரியா நான்? மூத்த மாப்பிள்ளை, மனிதம், கைபேசி, மனசு பேசுது, திசைகாட்டி மரம், அம்மம்மா சொன்ன கதை, திருந்திய உள்ளங்கள், குறும்புக்கார பெண் ஆகிய 13 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  கதைகளுடன் கதாசிரியர்களின் பெயர் முகவரியும்  இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 236732).

ஏனைய பதிவுகள்

17963 வேருவலை எனும் பர்பரீன் (கட்டுரைத் தொகுப்பு).

எஸ்.எம்.கமாலுத்தீன் (மூலம்), எம்.எஸ்.எம்.அனஸ் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2ஆவது பதிப்பு, 2024, 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல.