9691 தரிசனம்: சிறுகதைத் தொகுதி வெளியீடு 2012.

செல்வசுகுணா (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (பருத்தித்துறை: எஸ்.பீ.எம். அச்சகம், வி.எம்.வீதி).

viii, 151 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-53921-1-2.

வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவையின் வெளியீடாக வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்பு இது. அப்பிரதேச இலக்கியவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சிறுகதைகளையும் அவர்களது புகைப்படம் உள்ளிட்ட வாழ்க்கைக் குறிப்புகளையும் பதிவுசெய்துள்ளனர். இப்படியும் சிலபேர் (புலோலியூர் செ. கந்தசாமி), கோழிக்கறி (குந்தவை), சந்தனம் அக்காவின் பேத்தி (தெணியான்), நல்ல விருந்து (க.நவம்), பிணம் தின்னிகள் (வல்வை ந.அனந்தராஜ்), சவாரி (க.சின்னராஜன்), சுமை (இ.திருத்துவராஜா), யசிமொட்டோவின் ஊதாநிற மீன்கள் (பரன்), இன்னுமோர் உலகம் (கொற்றை பி.கிருஷ்ணானந்தன்), ஆண்மை (அனாதரட்சகன்), முற்றுப்புள்ளியும் சில வினாக்களும் (வசந்தி தயாபரன்), அழியாத தடங்கள் (புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்), பட்டமரம்(சத்திய மலரவன்), புது வசந்தம் (த.லோகநாயகி), காலங்கள் வரைந்த கோலங்கள் (கி.நவநீதன்), கனவுதேசம் (தென் பொலிகை குமாரதீபன்), சொத்து (சீனா உதயகுமார்)  முதலிய கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூலின் தொகுப்பாசிரியர்  செல்வி  எஸ்.செல்வசுகுணா, அப்பிரதேசத்தின் கலாச்சார உத்தியோகத்தராவார்.

ஏனைய பதிவுகள்

Caça Niquel Halloween Aprestar online acessível

Content Pompeii Casino online: Video slots Dicas infantilidade truco para alcançar Haveres bônus disponíveis Bônus criancice Casinos infantilidade Arame Efetivo Destasorte que incorporar Betano, incorporar

Trolls tennis stars Casino Slots

| Selvudeluk gennem ROFUS.nu | Kontakt Spillemyndighedens hjælpelinje online StopSpillet.dk | Indbetal nøjagtig 100 kr. Plu nogle 50 freespins | Nedbrydnin på x5 er gangbar