9705 மறுமலர்ச்சிக் கதைகள்.

செங்கை ஆழியான் (தொகுப்பாசிரியர்). திருக்கோணமலை: கல்வி பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு-கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 1997. (திருக்கோணமலை: அச்சகத் திணைக்களம், வடக்கு-கிழக்கு மாகாணம், லவ் லேன், உப்புவெளி).

x, 103 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 24.5×15.5 சமீ.

மறுமலர்ச்சி என்ற ஈழத்துச் சஞ்சிகை 1946ம் ஆண்டு பங்குனி மாதம் வெளிவரத் தொடங்கியது. 1948 வரை 24 இதழ்கள் வெளியாகின. குறுகிய கால இதழானபோதிலும், ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் மறுமலர்ச்சிக் காலம் என்றொரு காலக் கணிப்பிற்கு இவ்விதழ் வித்தூன்றயது. மறுமலர்ச்சியின் ஆசிரியர் குழுவில் தி.ச.வரதராசன் (வரதர்), கா.மதியாபரணம், நாவற்குழியூர் நடராசன், ச.பஞ்சாட்சர சர்மா, க.இ.சரவணமுத்து ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ஈழத்து இலக்கியப் புனைகதைத் துறையின் மறுமலர்ச்சிக் காலகட்டத்துச் சிறுகதைகளில் சிறப்பானவை  என ஆசிரியர்  கருதிய 25 சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இவற்றை எழுதிய காலகட்டம் 1946-48 என்பதையும் எழுதியவர்கள் தமது இளம்வயதில் இவற்றை ஆக்கியுள்ளனர் என்பதையும் இச்சிறுகதைத் தொகுதியைப் படிப்பவர்கள் நினைவிற்கொள்ள வேண்டும். அ.செ.முருகானந்தன் (பழையதும் புதியதும், மாடு சிரித்தது), சம்பந்தன் (இரண்டு ஊர்வலங்கள், அவள்), இலங்கையர்கோன் (சக்கரவாகம், மேனகை), வரதர் (இன்பத்திற்கு ஓர் எல்லை, வேள்விப் பலி), து.ருத்திரமூர்த்தி (தூக்கணாங் குருவிக்கூடு), சு.வேலுப்பிள்ளை (பரோபகாரம், நிலைகேடு), நாவற்குழியூர் நடராஜன் (சாயை), கு.பெரியதம்பி (எட்டாப்பழம், அம்மான் மகள், வீண் வதந்தி), நடனம் (வாழ்வு), வே.சுப்பிரமணியம் (நகக்குறி), தாழையடி சபாரத்தினம் (ஆலமரம், தெருக்கீதம்), இராஜநாயகன் (அவன், உலகக் கண்கள்), எஸ்.ஸ்ரீநிவாசன் (முன்னேற்றம்), இ.பொன்னுத்துரை (வண்டிக்காரச் சுப்பன்), சொக்கன் (பொன்பூச்சு), வல்லிக்கண்ணன் (புகழ் அரசி) ஆகியோரின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 156269, 123916).

ஏனைய பதிவுகள்