கெக்கிறாவ ஸஹானா. (இயற்பெயர்: ஏ.எஸ்.ஜஹனாறா). கெக்கிறாவ : ஏ.எஸ்.ஜஹனாறா (கெக்கிறாவ ஸஹானா) , 32/21 செக்குபிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44 ஸ்டேஷன் வீதி).
ix, 89 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-51679-5-6.
விஞ்ஞான, ஆங்கில, தமிழ்மொழி ஆசிரியையாகப் பணியாற்றும் கெக்கிறாவ ஸஹானா வட-மத்திய மாகாணத்தில் இருந்து ஈழத்துப் படைப்புலகச் சூழலுக்கு காத்திரமான இலக்கியப் பங்களிப்பினை வழங்கிவருபவர். கோடரிக் காம்புகள், முடிவில் தொடங்கும் கதைகள், சுவர்கள், பார்வை, திரை, பனிக்கட்டி உருகிடின், பிச்சைக்காரன், கறுப்பும் வெள்ளையும், சங்கிலித் தொடர், பெண்மை-உண்மை, காட்டு நெடுவான நிலவு, சாக்கடை மேடையில் ஒரு மாநாடு ஆகிய தலைப்பில் இவரால் அவ்வப்போது எழுதப்பெற்ற பன்னிரு கதைகள் இந்நூலை அலங்கரிக்கின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 233367).