9712 வாழ்க்கைப் பயணம்: சிறுகதைத் தொகுப்பு.

முருகேசு ரவீந்திரன். யாழ்ப்பாணம்: நண்பர்கள் வட்டம், யாழ். இந்துக் கல்லூரி உயர்தரம் 1985, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (கொழும்பு : குமரன் அச்சகம், 39, 36ஆவது ஒழுங்கை).

115 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-54221-0-9.

இந்நூலில் ரவீந்திரன் எழுதிய பாசம், மாற்றம், பிறந்த மண், சின்ன அரும்பு, புள்ளிக்கோழி, அந்திமம், மீட்சி, வேதனை, வாழ்க்கைப் பயணம், தயக்கம், மறக்க முடியெல்லை, இதம் ஆகிய தலைப்புகளிலான 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகப் பணியாற்றும் முருகேசு இரவீந்திரன், எழுத்துத் துறையிலும் ஆர்வம் மிக்கவர். காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவராவார். 1993இல் வானொலியில் ஒலிபரப்பாகிய நாளைய சந்ததி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த ரவீந்திரன் 1994இல் வானொலி நாடகக் கலைஞராகத் தேர்வுசெய்யப்பட்டார். கல்விச் சேவையில் வாராந்தம் ஒலிபரப்பாகும் ஆய்வரங்கம் நிகழ்ச்சியை நடத்துவதில் வெற்றிகண்டவர். வீரகேசரியின் ஒப்புநோக்காளராகப் பணியாற்றிய இவர், 1997இல் வானொலியின் பகுதி நேர அறிவிப்பாளராகிப் பின் 1999இல் செய்தி வாசிப்பாளராகத் தெரிவுசெய்யப்பட்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225889).     

ஏனைய பதிவுகள்

Sloturi Grati Colea Aparate 2023

Content Casino golden tour slot – Promovăm Jocul Răspunzător În Cazinourile Online Top Novomatic România Cazinouri Prep 2024 Jocuri De Sloturi Clasice Novomatic Citește spre